"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 அக்டோபர் 2011

மனதை தொட்டு சொல்லுங்கள்...

0 comments


காங்கிரஸ் என்பது ம.மீ.சே சொத்தா? அல்லது அதிரை பேறுர் ஆட்சி என்பது நாற்பது வருட கால வாரிசின் கோட்டையா?

அரசியலில் உங்களுடன்(காங்கிரசுடன்) பயணித்த நூருவருட அனுபவமுள்ள முஸ்லிம் லீக் கட்சியில் ஆரம்ப காலமுதல் சேவை செய்யும் கே கே ஹாஜா விருப்பப்பட்டது போல் அவர்களை மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக நிற்கவைக்க தயங்கியது ஏன்?

கீழத்தெருகென்று ஒரு பள்ளி இல்லை என்று ஏக்கம் நிலவியபொழுது பிலால் நகரில் ஒரு பள்ளி கட்ட முயற்சிக்கையில் ஏன் தடையாக இருந்தீர்கள் ? உதவி செய்யா விட்டாலும் பரவா இல்லை உபத்திரமாக இருந்தது ஏன்? பிலால் நகர் பள்ளியை பராமரிக்கும் செலவிற்கு கஷ்டப் பட்ட நேரத்தில் தனக்கென்று கல்யாண கடித புத்தகம் இருந்தால் அல்லாஹ் உதவியால் செலவுகளை சமாளித்துவிடலாம் முயற்சித்த சமயத்தில் பல தடைகளை போட்டது ஏன் ?

நெசவுத்தெரு நுர்முஹம்மது அவர்கள் அல் அமீன் பள்ளி பிரச்சனைக்காக உங்களை எதிர்த்து குரல் எழுப்பியவரை அவரை (அவர் வீடு எரித்தது உள்பட)
நசுக்கியது ஏன்?

அரசியலில் எல்லாவகையிலும் அதிகாரம் படைத்தவர் நீங்கள் அல் அமீன் பள்ளிக்கு சுமுகமான தீர்வு ஏற்படுத்தி இருக்கலாமே அதை பூதகரமாக ஆக்கி சும்மா இருந்த குனசேகரை மத துவேச பிடித்த விசமியாக மாற்றி, ஹிந்துக்களின் ஓட்டை தக்கவைதுக்கொல்லவா? வெள்ளை காரனிட மிருந்து காங்கிரஸ் தன்னகத்தே ஆக்கிக் கொண்ட பிரித்தாளும் சூழ்சியை ஏன் அரங் கேற்றிநீர்கள்?

அல்லாஹ்வின் அல் அமீன் பள்ளிக்காக முயற்சிசெய்த சகோதர்களை பொய்வழக்கு போடவைத்து அவர்களின் வாழ்க்கையின் வாழ்வாதாரத்தில் சவால்களை ஏற்படுத்தியது ஏன்?

மத்திய அரசின் விமானத்துறை பணியில் இரண்டு சீட்டை பெற்ற நீங்கள் ஒன்றையாவது சமுதாயதிற்கு விட்டு கொடுத்து ஒன்றை உங்கள் குடும்பம் வைத்து இருக்கலாமே? இரண்டையும் தன்னகத்தே விழுங்கியது ஏன்?

முன்னால் (திமுக) தமிழக அரசு பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கிய பிறகு அதை கிடப்பில் போட்டதற்கு காரணம் ம மீ செ குடும்ப பெயர் வைப்பதா அல்லது குணசேகரனின் தந்தை பெயர் வைப்பதா என்ற ஈகோவால் கிடப்பில் போட பட்டதா?

தற்பொழுது பேருந்து நிலையம் இருக்கும் இடமும் , அல் அமீன் பள்ளி பகுதி இடமும் இராவுத்தர் அப்துல் மஜீத் மரைக்யாரால் தானம் வழங்கப்பட்டதின் தியாகத்தின் நன்றிக் கடனாகவாவது அவர்களின் பெயராலோ அல்லது அந்த இடம் கிடைக்க முயற்சித்த, நம் ஊர்மக்களின் கல்விக் கண்னை திறந்த காதர் முகைதின் கல்வி கழக நிறுவனர் sm சேக் ஜலாலுதின் பெயரிலோ பெருந்தன்மையா அமைக்க முயற்சித்திருக்கலாமே?

நம் ஊர்க்கான இரயில் போக்குவரத்து நின்றபிறகு எத்தினை உயிர் இழப்புகள் நம் மக்கள் படும் கஷ்டங்கள் அதற்காக அதிரை மக்கள் அகலரயில் பாதை கேட்டு அல்லல் படாத நாட்கள் இல்லை? அதற்கான ஒரு வாயசைப்பை கூட அரசு இயந்திரங்களிடம் கட்டத்து ஏன்?

உங்கள் வாக்கு சேகரிப்பின் பொழுது அல் அமீன் பள்ளி கட்டிடத்திற்கான நிலைப்பாட்டினை வாக்குரியை அளிக்காதது ஏன்?

மேலத்தெருவிற்கென்று என்ன செய்திர்கள்? முதல் முதலாக காட்டுப் பள்ளி தர்காவிற்க்கு சார்பாக அதை எதிர்த்தவர்கள்மீது (மேலத்தெரு யூனுஸ் மகன் உட்பட) பொய் வழக்கு போட வைத்தது தானா ?

காலணி ஏற்பட்ட பிரச்சனையில் பொய் வழக்கு போடப்பட்ட சகோதர்களுக்காக என்ன சிரத்தை எடுத்துக் கொண்டீர்கள்? அதில் உங்கள் பங்கு தான் என்ன ?

இன்னும் எத்தனை எத்தனையோ ....

இம்முறை நிச்சயமாக நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிக்கக் கூடாது....

மாற்றத்தை விரும்பி சுகந்திரத்தை சுவாசிக்க விரும்பிகிறவன் தான் மனிதன்
சிந்தியுங்கள் செயல் படுங்கள் .

thanks:adiraikural

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி