இல்லாததை நினைத்து ஏங்கி;
இருப்பனைக் கண்டு
மூளை வீங்கி;
எட்டி நிற்கும் கவலையைக்
கட்டிப்பிடிப்பதை நிறுத்து;
தீயதைத் தூர விட்டு;
நன்மையை தூவி விட்டு;
முகம் மலற
புன்னகைச் செய்!
மனம் முழுவதும்;
மணம் வீசி;
அழுக்கான மனதை
குப்பைக்கு வீசி;
மீண்டும் வாராத
வாழ்க்கையை;
மீள முடியா வாழ்க்கையிற்காக
முதலீடுச் செய்!
பொறாமை; பெறாமை
வேண்டும் என பிரார்தனைச் செய்!
-யாசர் அரஃபாத்