"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 அக்டோபர் 2011

உள்ளாட்சி - உன் வாழ்க்கை உன் கையில் ..!

0 comments

ன் வாழ்க்கை உன் கையில் என்ற தத்துவத்துக்கு சரியான விளக்கம் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதுதான்.

இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அதற்கு முன் இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

தேர்தலில் வென்ற பிறகு, அந்த நபரை உங்களால் பார்க்க முடியுமா? பிரச்சினைகளை சொல்லி உரிமையுடன் தீர்த்து வைக்கக் கோர முடியுமா? இந்தக் கேள்விக்கு உங்கள் மனது ‘ஆம் முடியும்’ என்று பதில் தந்தால்… அவருக்கு ஓட்டுப் போடுங்கள்.

ஒரே ஊரில் அண்ணன் தம்பி மாமன் அக்காள் என நான்கு உறவுகளும் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள்… கட்சிகளின் பெயரில். இவர்களை கட்சி சார்ந்து தேர்வு செய்வதா… உறவு சார்ந்து தேர்ந்தெடுப்பதா…?

எதற்குக் குழப்பம்… இவர்களில் எவரால் அனைவரிடமும் இணக்கமாகப் போக முடிகிறதோ, அவருக்குப் போடுங்கள் வாக்குகளை. மனைவியை தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்து பின் அதிகாரத்தைக் கையிலெடுக்கத் திட்டமிடும் கயவர்களை அடியோடு புறக்கணியுங்கள். ஒப்பந்தப் புள்ளி வர்த்தகர்களை, கிராம – நகரசபைகளைவிட்டு விரட்டுங்கள்!

உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சிகளின் பலத்தைப் பரிசோதிப்பதற்கான தேர்தல் அல்ல. அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் அல்லது தீர்வுக்காக வாதாடும் நபரை தேர்வு செய்வதற்கான தேர்தல். இவற்றில் பதவியில் அமரும் நபர்கள் எப்போதும் மக்களால் அணுகப்படுபவராக இருக்க வேண்டும்.

சொல்லப் போனால் மாநிலத்தில் அதிக அதிகாரமும், தங்கள் பகுதியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிற சக்தியும் இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கே உள்ளன.

மாநகராட்சிகள் தவிர்த்த ஏனைய உள்ளாட்சிகளில், எந்த கட்சியின் பிரதிநிதியாக இருந்தாலும், அவரது அடிப்படை குணநலனை கருத்தில் கொண்டே வாக்களியுங்கள்.

மாநகராட்சிகள் மட்டும் நேரடி அரசியலுடன் தொடர்புடையவையாக இருப்பதால், எந்தக் கட்சி வேட்பாளர் அரசியல் ரீதியாகப் போராடி வென்று மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என நம்புகிறீர்களோ அவர்களுக்கே வாக்களியுங்கள்!

ஆனால் வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிட வேண்டாம். உங்கள் கையில் இருப்பது வாக்குச் சீட்டு மட்டுமல்ல… வாழ்விடத்தை வளமிக்கதாக்கும் துருப்புச் சீட்டு!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி