"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 நவம்பர் 2011

துபாய்: மெட்ரோவில் உறங்கினால் 300 திர்ஹம் அபராதம்

0 comments

துபாய் மெட்ரோ தொடர்வண்டி பயணத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து, இறங்க வேண்டிய நிலையம் தாண்டிப் பயணித்த பெண்ணொருவருக்கு 300 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்த தன் பெற்றோரைக் காணவந்துள்ள அப்பெண், காலித் பின் வலீத் நிலையத்தில் ஏறி, தூங்கிவிட்டதால் தான் இறங்க வேண்டிய இபுனு பதூதா நிலையம் தாண்டியும் பயணித்துள்ளார். ஜெபல் அலி நிலையத்தில் பரிசோதகர் வந்து எழுப்பிவிட்டு, அப்பெண்ணுக்கு 300 திர்ஹம் அபராதம் விதித்துள்ளார்.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள வழிகாட்டி நூலில் செய்யக்கூடாதவைகளாக 31 செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை மீறிச் செய்தால் 100 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், வண்டியில் உறங்குவது பற்றி அதில் குறிப்பிட்டிருக்கவில்லை. அதே சமயம், காத்திருப்பு தளங்கள், தங்குமிடங்கள், மெட்ரோ நிலைய்ங்கள் ஆகியவற்றில் உறங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி