அதிராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கு வெகு விரைவில் 3G என்ற அதி நவீன மொபைல் வசதி வர இருக்கிறது. இதனால் நம் சமுதாயதிற்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? என்ன தீமை உருவாகும்? இவை சம்பந்தமாக ஓர் அறிவு சார்ந்த அலசல்.
2G நம் இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தலை கீழ் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை நாம் மறந்திட வாய்ப்பில்லை. ஆனால் 2G வரவால் சமுதாய சீர்கேடு ஏற்பட்டு விடவில்லை. ( சில ஆயிரம் கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதை தவிர) ஆனால் 3G அறிமுகத்தால் பெரியதொரு சமுதாய சீரழிவு ஏற்பட மிகப்பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3G மொபைல் நெட்வொர்க் மூலம் அதிவேக இன்டர்நெட் உபயோகப்படுத்தலாம். வீடியோ மற்றும் புகைப் படங்களை நொடியில் உலகில் எந்த மூளைக்கும் அனுப்பிவிடலாம். இவை எல்லாம் பெரிய விஷயமல்ல.
3G மூலம் வீடியோ டெலிபோன் தான் மிகப்பெரிய பிரச்சனை உருவெடுக்கக் காத்திருக்கிறது. உங்கள் வீட்டு ஜன்னல் கதவை திறக்காமலேயே அந்நிய நபருடன் வீடியோ போன் மூலம் உரையாடலாம். அந்நியன் எங்கிருந்தாலும் இதற்க்கு வாய்ப்புகள் அதிகம். இதில் மிகக் கேடான விஷயம் என்னவெனில், மறு முனையில் உள்ளவர் இந்த உரையாடல் / நிகழ்வுகளைப் பதிவு செய்யலாம். இந்தப் பதிவை வைத்து ப்ளாக் மெயில் செய்ய வாய்ப்புள்ளது.
வருமுன் காப்போம் (Prevention is better than cure) என்ற கூற்றின்படி தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கேமரா போன் வாங்கி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மொபைல் போனில் என்னென்ன வீடியோ, புகைப் படங்கள் உள்ளன என்பதை அவ்வபோது நோட்டமிடுதல் அவசியமானது. தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு இதன் தீமைகளை விளக்கிக் கூறினாலே, பிள்ளைகள் தங்களை தாங்களே இவ்வித சூழ்நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.
"ஒரு தீமையிலும், ஒரு நன்மை உண்டு. புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் விழும்" என்ற தத்துவப் பாடலின்படி, இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் அன்பர்கள் தங்கள் உறவினர்களுடன் மனமார உரையாடலாம். தங்கள் வீட்டின் விசேஷ நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பாகக் கண்டுகளிக்கலாம். வீட்டு கட்டுமானப் பணிகளைப் பார்வையிடலாம். அவரசர கால நிகழ்சிகளையும் டிவி நிலையங்களுடன் இணைந்து ஒளிபரப்பு செய்யலாம். மாணவர்கள் கல்வி கற்க videoconfrence முறையில் இந்த வசதியைப் பயன்படுத்தி மேற்படிப்பு படிக்கலாம். குடும்ப நல மருத்துவருடன் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறலாம். 3G கட்டணம் மாதம் ரூ. 1500 / வரை என மொபைல் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன.
நம் அந்தரங்க விஷயங்கள் வெளியில் போகாதவரை இவை எல்லாம் நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நம் சமுதாயத்தை அறிவியல் ரீதியாக தகர்க்க வரும் இதுபோன்ற டெக்னாலஜி ஊடுருவலை உன்னிப்பாகக் கண்காணிக்கத் தயாராகுங்கள். அறிவியலை வரவேற்போம், அறிவியல் என்ற போர்வையில் சமுதாயச் சீர்கேட்டைத் தடுத்திடுவோம்.
அப்துல் ரஜாக்