"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 நவம்பர் 2011

Applied Science சார்ந்த கல்விப் படிப்புகள்! – தொடர் 2

0 comments


சென்ற தொடரில் பயோடெக் மற்றும் Sugar Engineering போன்ற படிப்புகளை பார்த்தோம்
Diploma In Radiological Physics
மும்பை பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், அணுக்கரு தொடர்பான ஆய்வுகளில் தலைசிறந்த இந்திய மையம் ஆகும். ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ் என்பது இயற்பியல் துறையின் ஒரு பிரிவாகும். ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ் ரேடியோ ஆக்டிவிட்டி, அணு, ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. மருத்துவத்துறையிலும் ரேடியேஷன் தெரபி, இதனுடன் தொடர்புடையதே.
பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், ரேடியாலஜிக்கல் துறையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 25 மாணவர்களில் ஐந்து பேர் புரவலர்(ஸ்பான்சர்) அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. முதுநிலை இயற்பியல் பட்டதாரிகள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், விண்ணப்பிக்கலாம்.
ஸ்பான்சராக தேர்வு செய்யப்படுபவர்கள் ரேடியோ தெரபி தொடர்பாக குறைந்தபட்சம் ஓராண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு http://www.barc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
கடல்சார்ந்த இளநிலைப் படிப்புகள்(Maritime Industry)
Maritime என்பது கடலுடன் தொடர்புடைய செயல்பாடுகளைக் குறிக்கும். துறைமுகம், சரக்கு கையாளுதல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள கடல்சார் வணிகம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
Indian Maritime University இத்துறை சார்ந்து B.sc.,Nautical science, B.Tech Marine engineering, B.Sc., Martime Science, B.Tech Naval Architecture and ocean engineering உள்ளிட்ட படிப்புகளை வழங்குகிறது.
படிப்பை முடித்த மாணவர்கள் DRDO., இந்திய கப்பற்படை, கப்பல் சரக்குப் போக்குவரத்து, கப்பல் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியலாம்.
மாணவர்கள் ஐ.ஐ.டி.,களால் நடத்தப்படும் இணை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ட் மேனேஜ்மென்ட், குஞ்சலி மார்க்கர் ஸ்கூல் ஆப் மரைன் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டிரெய்னிங் ஷிப் சாணக்யா போன்றவை இப்படிப்புகளை வழங்கும் வேறு கல்வி நிறுவனங்களாகும்.
மூன்று முதல் நான்கு ஆண்டு கால படிப்புக்கு பிளஸ் 2 வில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கில பாடங்களுடன் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
மேலும் விவரங்களுக்கு http://www.imu.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
Applied science யின் பற்றிய நிறைவு தொடர் இன்னும் சில நாட்களில்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி