"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
12 நவம்பர் 2011

மிஸ்டு கால் & மிஸ்ஸிங் தி கா(ட்)ல்

0 comments

'வலை'தெருவில் நெளிகையில் எம்மை நெகிழச்செய்த இச்சிறு வரிகளை உள்ளபடியே உங்கள்முன் சமர்பிக்கின்றேன்..


பாதையில் ஊரும் பாம்பை பிடித்து
தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான்
மொபைல் போன்களை நாம் நமது சட்டைப்பைக்குள்
வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

ஒரு சிறிய "மிஸ்டுகால்" என்றால்
உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும்
அதை பார்த்துவிட்டுத் தான்
அல்லது விடையளித்து விட்டுத்தான்
அடுத்த விசயத்திற்கு நம்மை திசைதிருப்புகின்றோம்.

நமது கையிலிருக்கும் அந்த மொபையில்
எந்தளவு நமக்கு பயனளிக்கின்றது
என்று நாம் உறுதிப்படுத்துகின்றோமா என்றால், இல்லை.
சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது,
ஆனால் பல கால்கள் வந்துகொண்டே இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து
அதை வாங்கி பாவிக்கின்றோம்.
நாம் கடுமையான வேலையில் சிக்கி
கடும் கஷ்டத்தில் வந்து தூங்குவோம்,
நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது
சிறிதாக ஒரு மிஸ்டுகால் வந்துவிட்டால்
ஏதோ தூக்கத்தில் பாம்பு கடித்துவிட்டது போல் அல்லது
சுனாமி வந்தது போல் அசிர்ச்சியுற்று எழுகின்றோம்,
உடனே பதிலளிக்க முயல்கின்றோம்.

அப்படியென்றால் நமது வீட்டுக்கு பக்கத்தில்,
நம்மை படைத்த, நமக்கு உணவளிக்கின்ற,
நமக்கு நல்ல தூக்கத்தை தந்த
அந்த அல்லாஹ்வின் வீட்டிலிருந்து அழைப்பு வருகின்றது
அந்த அதிகாலை “சுபஹ்” வேளை,
ஆனால் நாம் அயர்ந்து, ஆழ்ந்து தூங்குகின்றோம்.

ஒரு மிஸ்டுகால் (Missed call)க்கு
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழும்புகின்றோம்.
ஆனால்,
பெரிய சத்தத்தில் அழைப்பு கேட்கிறது,
“வெற்றியின் பக்கம் வாருங்கள்” என அழைக்கப்படுகின்றது.
ஆனால் நாம் செவிடர்களாக தூங்குகின்றோம்.

وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ [البقرة

"பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்...!

பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்"

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ [البقرة : 153

"நம்பிக்கை கொண்டோரே....!

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்...!
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”.
படித்தவுடன் சிலருக்கு சிலிர்த்திருக்கும், சிலர் சிந்திக்க துவங்கியிருப்பர். எதுவாக இருந்தாலும் சரி மிகப்பெரிய நன்மைகள் கிட்டும் இச்சிறிய செயலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இம்மை மற்றும் மறுமையில் வெற்றிக்கொள்வோம்.. இன்ஷா அல்லாஹ்..
"Don't miss to answering the call of Allah"
எங்கோ சுட்டது (மனதிலும்)மீரஷாஹ் ரஃபியா
பதிப்பு :அதிரை.இன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி