"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
12 நவம்பர் 2011

சவூதியில் அதிரைச் சகோதரர் மரணம்!

0 comments


சவூதி அரேபியாவின் தமாம் நகரில் பணிபுரிந்து வந்த நமதூர் நெசவு தெருவைச் சார்ந்த ஸமது (அப்பா) பேரனும் ஜாகிர் ஹுசைன் மற்றும் தீன் முஹம்மது இவர்களின் தங்கையின் கணவருமாகிய மைனர் என்கிற உமர் ஹத்தா நேற்று முன்தினம் (10-11-2011) மதியம் காலமானார்.

விடுப்பில் ஊருக்குச் சென்று மீண்டும் சவூதி திரும்பிய 10 நாள்களில் இவரது மரணம் சம்பவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய மரணத்துக்கு முன் வீட்டினரைத் தொடர்பு கொண்ட இவர், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ஊரிலிருந்து திரும்பியது முதலே இவர் மனச்சோர்வுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மரணித்துவிட்ட அந்தச் சகோதரரின் பிழைகளை அல்லாஹ் பொருத்தருள்வானாக. அவரது குடும்பத்தாருக்கு மன நிம்மதியைத் தருவானாக.

தகவல்: S. ஹமீத்

thanks : adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி