MSME DEVELOPMENT INSTITUTE எனப்படும் இந்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (Govt. of India, Ministry of Micro, Small and Medium Enterprises) நடத்தும் பயிற்சி வகுப்புகள் பலரின் வாழ்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது!
இப்பயிற்சியின் மூலம் இவர்கள் சொந்த தொழில் செய்து நல்ல வருமானமும் ஈட்ட முடியும்.
தையில் பயிற்சி, செல் போன் சர்வீஸ் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி போன்ற பல பயனுள்ள பயிற்சிகளை அளித்து வருகிறது! இது போன்ற பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்களை அரசே, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமுதாய மக்களுக்கு மானியமாக வழங்குகிறது!
பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் சீக்கிரமாக முயற்சி செய்து பயன் பெறவும். பொருளாதாரத்தில் பின் தங்கிய உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்த இலவச பயிற்சியை சொல்லி பயன் அடைய செய்யவும்.
பயிற்சி விவரங்கள்:
Sl. No | Courses | Duration | Qualification |
---|---|---|---|
1 | Advance Automobile Technology | 3 Months | 10th Pass |
2 | Air Conditioning & Refrigerator | 1 Month | 10th Pass |
3 | Beautician Skills | 1 Month | 10th Pass |
4 | Electrical Course | 3 Month | 10th Pass |
5 | Industrial Control Automation | 2 Month | Engineering/Diploma |
6 | Software Testing | 10 Days | Engineering/Diploma |
மேலே கூறிய இலவச பயிற்சி வகுப்புகளுக்கு நேர்முகத் தேர்வு மூலம் உரிய நபருக்கு வாய்ப்பளிக்கப்படும்.
இந்த சலுகை பெற பின் வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
1. சிறுபான்மையினராக இருக்க வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
நேர்முகத்தின் போது கொண்டு வர வேண்டியவை:
2 Pass Port Size போட்டோ, வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ்.
குறிப்பு: வருமானச் சான்றிதழ் நேர்முகத்தின் போது கொண்டு வர முடியமால் போனால்! கால அவகாசம் கேட்டு பின்னர் அவற்றை சமர்ப்பிக்கலாம்.
தொடர்ப்பு கொள்ள:
Sathish Kumar,
MSME Devlopement Institute,
Govt. of India, Ministry of MSME,
65/1, G.S.T. Road, Guindy,
Chennai-600 032.
Room No: 37, MSME DI
Phone Number : 044-22501011