"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 நவம்பர் 2011

ஆட்சியைக் கலையுங்கள் - தேர்தலுக்குத் தயாராகுங்கள்; சவால்!

0 comments

"ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்குத் தயாராகுங்கள்; அப்போது யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்" என தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அதிமுகவுக்குச் சவால் விடுத்துள்ளார்.

பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்துத் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்டு நடிகர் விஜயகாந்த் பேசும்போது,

"தேமுதிக தொடங்கப்பட்ட நாள் முதலே, மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று தனியாக போராடிவந்தோம். ஆனால், திமுக குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்கள் நினைத்தார்கள். அதனால், கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். அதனால்தான், அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.

மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் தேமுதிக தொடங்கப்பட்டது. ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்குச் செத்தால் நாளைக்குப் பால் என்று. இனி அதையும் சொல்ல முடியாது. ஏன் என்றால் பால் விலையும் உயர்ந்து போய்விட்டது. இனி, இன்றைக்குச் செத்தால் நாளைக்குத் தண்ணீர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.100 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் நஷ்டத்திற்குப் போய்விட்டது. எல்லாம் நிர்வாகம் சரியில்லாததுதான் காரணம். அதை சரி செய்யாமல் பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்றார்கள். இன்றைக்கு எதற்கும் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. ஆனால், தற்போது விவசாயத்தை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நலிவடைந்துவிட்டதாக, இப்போது பால் விலை, பேருந்து கட்டணத்தை உயர்த்துகிறார்கள். அதிமுக-வும், திமுக-வும்தானே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தது. அப்படி என்றால், பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைய நீங்கள்தானே காரணம். இந்த 2 ஆட்சியிலும் எந்தத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.

பழைய கட்சிகளைத் தூக்கி எறிந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும். விஜயகாந்த் கையில் ஆட்சியைக் கொடுத்தால், அவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா? என்று கேட்கலாம். கொடுத்துப் பாருங்கள். ஊழலை எப்படி ஒழிக்கிறேன் என்று அப்போது தெரியும்.

மக்களை நேசிப்பவர்கள் கைகளில் ஆட்சியைக் கொடுங்கள். கடந்த ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக பல நூறு கோடிகளை வீணடித்தார்கள். இந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி புத்தகத்தை மாற்றுவதாக கூறி கோடிகளை வீணாக்கினார்கள். இப்படி மாற்றி மாற்றி மக்கள் வரிப்பணத்க்ச் செலவழித்துவிட்டனர். இந்தப் பணத்தை மிச்சம் பிடித்திருந்தாலே, இப்போது விலை ஏற்றம் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

எனவே, மக்களாகிய நீங்கள் அதிமுக, திமுக-வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியைக் கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தக்ச் சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.

மக்கள் பிரச்சினைக்காக எங்கள் தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்."

என்று அதிமுக-வுக்குச் சவால் விட்டார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தது முதல் மாலை 5 மணி வரை, மேடையை விட்டு எங்கும் செல்லாததோடு, தண்ணீர்கூட குடிக்காமல் மேடையிலேயே அமர்ந்திருந்தது மக்களைக் கவர்ந்தது.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி