"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 நவம்பர் 2011

பேரூராட்சி மன்றம் செவிசாய்க்குமா . . . ?

0 comments

பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. மக்கள் மாண்டனர். கன மழையால் பல்வேறு ஊர்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல்வேறு அணைகளும் நிரம்பி வருகின்றன'. இவையெல்லாம் கடந்த சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள்.

நமக்கென்று பெரிதாக வற்றாத ஜீவ நதிகள் எதுவும் இல்லை. வறட்சிக் காலத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவுடன் மல்லுக் கட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். மழைக்காலத்தில் பெருவேள்ளத்தோடு போராடுகிறோம்.

ஏன் இந்த நிலை . . ?

மழைப் பருவம் வரப்போகிறது என்பது முன்பே தெரிந்தும் கூட அதற்கான திட்டமிடலோ முன்னேற்ப்படுகளோ நம்மிடம் சிறிதும் இலை. ஏரிகள், குளங்கள் தூர் வாரப்படவில்லை. ஊரில் உள்ள மழைநீர் வடிகால்கள் முன் கூட்டியே பராமரிக்கப்படவில்லை. கடலில் கலந்து விரயமாகும் மழைநீரைச் சேமிப்பதற்கான சேகரிப்பு தொட்டிகளையும் நாம் அமைத்துக் கொள்ளவில்லை.

முன்பெல்லாம் மழைநீர் ஊரிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றைச் சென்றடையும். ஆனால், இன்று பல்வேறு குளங்கள், ஏரிகள் இருந்த இடங்களில் குடியிருப்புகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றிற்கு நீர் செல்லும் பாதைகளும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தண்ணீர் எங்கே செல்லும் ?

சில நாட்கள் பெய்த மழையிலே மற்ற ஊர்களில் ஏரி,குளம் எப்படி நிரம்பியது . . ?

பெய்யும் மழை சிறுசிறு ஏரி, குளம், குட்டிகள் என்று படிப்படியாக நிரம்பி அதன்பிறகுதான் நம்ம ஊருக்கு தண்ணீர் வரவேண்டும். ஆனால், முன்பிருந்த அந்தச் சிறுசிறு குளம், குட்டைகள் எல்லாம் அழிக்கப்பட்டு அடையாளமின்றிப் போனதால், இன்று மழைநீர் ஒரேஅடியாக கடலுக்லுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பதே நிஜம்.

மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையையும் நாம் கெடுத்து வைத்திருக்கிறோம். விளைவு என்னவென்று தெரியாமல் சர்வ அலட்சியமாக பாலிதீன் கவர்களை வீசி எறிகிறோம். அவை மண்ணில் புதைந்து மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையைத் தடுக்கிறது.

ஆற்றுச் செல்வங்களையும் நாம் சுரண்டிவிட்டோம். பல ஆறுகள் ஊரின் கழிவுநீர்க் கால்வாய்களாகவே உள்ளன. அங்கு, லாரியில் மண் அள்ளியது போதாதென்று பொக்லைன் வைத்து மணல் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால், ஆறு தண்ணீரச் சேமித்துவைக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

நம் முன்னோர்கள் இயற்கையைப் போற்றினார்கள். அதனுடன் இனைந்து வாழ்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும், குளங்களும் அமைத்து நீர்வளத்தைத் தேக்கி வைத்தார்கள். அந்தக் காலப் பெரியவர்கள் நீர் நிலைகளை ஏற்ப்படுத்துவதை தம் வாழ்வின் பெரிய தர்மமாக நினைத்ததுடன் நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் உணர்ந்திருந்தார். ஆண்டுதோறும் ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டதை உறுதி செய்தார்கள், நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், நாமோ ? அது குறித்த அலட்சிய மனோபாவத்துடனே இருக்கிறோம்.

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைப்போம். வீட்டின் பராமரிப்பு அம்சங்களில் இதையும் ஒன்றாக நினைப்போம். ஏரி, குளம் போன்ற நீராதாரங்களில் குப்பைகள், கழிவு நீரைச் செலுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதை நம் கடமையாக நினைப்போம்.

சேமிப்பு என்பது பொருளாதாரத்துக்கு மட்டுமல், நீராதாரத்துக்கும்தான் என்பதை உணர்வோம்.

நமதூரில் உள்ள குளங்களை தூர் வார வேண்டும் என்று அதிரைஃபேக்ட் வலியுறுத்துகிறது.

என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி