"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 நவம்பர் 2011

பெருநாளும் . . ! மின்துண்டிப்பும் . . !

0 comments
பெருநாளும் புத்தாடைகளும், பெருநாளும் வட்டிலப்பமும் என்பது போல் அதிரையில் பெருநாளுடன் ஒன்றிணைந்த விசயம் மின் துண்டிப்பு. மின்துண்டிப்பு தமிழகம் முழுவதுமே வழக்கமான ஒன்றுதான். அதற்கும் பெருநாளைக்கும் தொடர்பு படுத்தக் கூடாது என்று கூறவிழைவோர், இந்த மின் துண்டிப்பு பிற மதத்தினரின் பண்டிகை நாள்களில் ஏற்படுவதில்லை என்பதை கவனிக்கவும்.

முஸ்லிம்களின் பெருநாள்களில் சில சமயம் முழுமையாக மின் துண்டிப்பு செய்யும் மின்வாரிய உறுப்பினர்கள், பல சமயங்களில் மிகவும் குறைவான வோல்ட் மின்சாரத்தை வழங்கி டார்ச்சர் செய்கின்றனர். பெருநாள் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியிருக்கும் நாம் அந்த நேரத்தில் முணங்கிக் கொண்டே நம் வேலைகளைச் செய்து முடிக்கின்றோம். அடுத்தடுத்த பெருநாள்களிலும் இது தொடரும்.

இப்பிரச்சனை இனியும் தொடராதிருக்க வேண்டுமெனில், சேர்மன் அஸ்லம் அவர்களும் துணை சேர்மன் பிச்சை அவர்களும் இணைந்து நாளையே மின் வாரியம் சென்று வேண்டுகோள் வைக்க வேண்டும். வேண்டுகோள் செவிசாய்க்கப்படாவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் விடுக்கலாம். இல்லை எனில், இந்தப் பெருநாளையும் அதிரைவாசிகள் முணங்கிக் கொண்டே கொண்டாட வேண்டியதுதான்.

கோரிக்கையையும் மீறி, பெருநாளன்று குறைந்த அழுத்த மின் விநியோகமோ அல்லது மின் துண்டிப்போ செய்தால், மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

thanks : adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி