"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
07 நவம்பர் 2011

CMP LANEல் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ..

0 comments

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!அல்லாஹ்வின் பேரருளால் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் அதிரை ஈத் கமிட்டி ஏற்பாட்டில் EPS என்று அழைக்கப்படுகின்ற ALMS பள்ளி வளாகத்தில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பயமுறுத்திக் கொண்டிருந்த மழை தூறல்கள் சற்றே ஓய்வெடுக்க சரியான நேரத்தில் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்த்தப்பட்டன. பெண்களுக்கு வகுப்பறை பகுதியிலும் ஆண்களுக்கு விளையாட்டுத் திடல் பகுதியிலும் தனித்தனி ஏற்பாடுகள்http://www.blogger.com/img/blank.gif செய்யப்பட்டிருந்தன.

சகோதரர் (காயல்) ஹசன் அலி அவர்கள் இஃலாஸ் என்ற தலைப்பில் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். இத்திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பெருமளவில் கலந்து கொண்டு தங்களின் கடமையை நிறைவேற்றினர்.




நன்றி : அதிரைபிபிசி
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி