Online Registration for IIT JEE
IIT கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய JEE எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் அக்டோபர் 31ம் தேதி முதல் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள IIT-JEE 2012 தேர்வுக்கு ஆன்லைன் மற்றும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்வது ஆகிய இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.
முக்கிய தேதிகள்!
அக்டோபர் 31ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை: IIT JEE 2012 இணையதளத்தில் பெயர் பதிவு.
நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை: விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர், விண்ணப்பங்களை நேரடியாக வாங்கி அதனை பூர்த்தி செய்து அளிக்கலாம்.