"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 டிசம்பர் 2011

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு!

0 comments
அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம். அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது. எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை ‘அதிரை எஜுகேஷனல் மிஷன்’ என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு கூகுள் குழுமம் இதோ : adirai-edu-mission@googlegroups.com


உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி. வஸ்ஸலாம்.

அன்புடன்,

அதிரை அஹ்மது

0091 98 94 98 92 30

adiraiahmad@gmail.com

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி