அதிரை பேரூராட்சி தலைவர் சகோதரர் S.H அஸ்லம் அவர்களுக்கு சவுதி அரேபியா வாழும் அதிரை சகோதரர்களின் அன்பான வேண்டுகோள்.
நம் ஊரின் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து கொண்டு இருக்கும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் நீங்கள் நன்றாக பணியாற்ற அல்லாஹுவிடம் பிரார்த்தித வண்ணமாக இருகின்றோம்.
நமது ஊரில் சுகாதார கேடுகளை விளைவிக்கக் கூடியவைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக நாங்கள் கருதுவது செட்டியான் குளம். செட்டியான் குளம் என்று கூறுவதை விட செட்டியான் சாக்கடை குளம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஊரில் உள்ள கழிவுகள் அனைத்தும் இக்குளத்தில் வந்து தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் நோய்களுக்கு வழிவகுகிறது. இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் யானைக்காள் போன்ற வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இக்குளத்திற்கு அருகில் இருக்கும் பள்ளிக் குழுந்தைகளுக்கு நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. நாம் இப்பொழுது முக்கியமாக கவனத்தில் கொள்வது கழிவு நீர் குளத்தில் தேங்காமல் இருப்பதற்கு வழிகான வேண்டும்.
உங்களுக்கு முன் இப்பொறுப்பில் இருந்தவர்களும் இப்பிரச்சனையைக் கண்டுகொள்ளவில்லை ஏறெடுத்தும் பார்கவில்லை. நீங்கள் அவ்வாறு இருக்க மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இப்பிரச்சனைக்கு தீர்வுக்காண நாங்கள் நினைத்த சில வழிகள்.
1. கழிவு நீர் குளத்தில் தேங்காமல் இருக்க, குளத்தின் இரண்டு பக்கங்களிலும் வாய்க்கால் அமைத்து கழிவு நீர் உடனே வெளியேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இங்கு நீர் தேங்காமல் குளம் வற்றிவிடும்.
2. இக்குளத்திற்கு அருகில் வசிப்பவர்கள் குப்பைகளை இக்குளத்திலேயே கொட்டி விடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு அறிவுரை கூற வேண்டும்.
3. குளத்தில் உள்ள கழிவு நீர் வற்றியவுடன் கப்பி மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் வீடு இடிப்பவர்கள் கொடுக்கும் மண் மற்றும் கற்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
இவ்வாறு செய்தால் இவ்விடத்தை வரும் காலங்களில் இப்பள்ளியின் விளையாட்டு மைதானமாக மாற்ற முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இப்படிக்கு:-
சவுதி அரேபியா.