"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 டிசம்பர் 2011

ஹஜ் குழுவுக்கு வழங்கப்படும் அரசு மானியம் உயர்வு !

0 comments



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு :
சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பள்ளிவாசல் மற்றும் தர்காக்களில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 60 வயது நிரம்பிய பேஷ் இமாம்கள், மோதினார்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் முஜாவர்கள் ஆகியோரிடமிருந்து ஓய்வூதியம் பெறுவதற்காக வரப்பெற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, உலமா ஓய்வூதியப் பயனாளிகளின் எண்ணிக்கையை 2,400-ல் இருந்து 2,600 ஆக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையையும் 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3.12 கோடி ரூபாய் செலவாகும்.
இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பெருமக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவரும் வக்ஃப் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, வாரியத்தின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வண்ணம், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தவும், வக்ஃப் வாரியத்தில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை அறிந்து, அவர்களுடைய ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கும் வகையில், வக்ஃப் வாரியத்திற்கு சிறப்பு ஒட்டு மொத்தத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, வருடந்தோறும் ஹஜ் புனித யாத்திரைக்காக செல்லும் பயணிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான வசதிகளை செய்து தரும் பணியினை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் அன்றாட நிர்வாக செலவு அதிகரித்துள்ளதையும், தமிழ் நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதையும் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

செய்தி வெளியீடு எண் : 747

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி