அழுக்குச் சட்டையும்
எண்ணைக் காணா
என் சிகையும்;
என்னைக் காணா
முகக் கண்ணாடியும்;
காலணிகள் என்றுக்
காதில் மட்டுமே விழுந்து;
தள்ளமுடியா வயதில்
தள்ளுவண்டியைத்
தள்ளிக்கொண்டு;
படிக்காத மேதைகளில்
நானும் ஒருவனாய்;
குழந்தைத் தொழிலாளர்
பட்டம் பெற்று;
என்னைப் படம் பிடித்து;
பக்கங்கள் நிரப்பி;
பாராட்டுப் பெறும்
புகைப்படக்காரன்;
தன்னை அறியாமலே
என்னைத் தொழில் ஈடுபடுத்தி;
தலைப்பு மட்டும்
ஒழிப்போம்
குழந்தைத் தொழிலாளர்களை!
--
எண்ணைக் காணா
என் சிகையும்;
என்னைக் காணா
முகக் கண்ணாடியும்;
காலணிகள் என்றுக்
காதில் மட்டுமே விழுந்து;
தள்ளமுடியா வயதில்
தள்ளுவண்டியைத்
தள்ளிக்கொண்டு;
படிக்காத மேதைகளில்
நானும் ஒருவனாய்;
குழந்தைத் தொழிலாளர்
பட்டம் பெற்று;
என்னைப் படம் பிடித்து;
பக்கங்கள் நிரப்பி;
பாராட்டுப் பெறும்
புகைப்படக்காரன்;
தன்னை அறியாமலே
என்னைத் தொழில் ஈடுபடுத்தி;
தலைப்பு மட்டும்
ஒழிப்போம்
குழந்தைத் தொழிலாளர்களை!
--
ஆக்கம் : - யாசர் அரஃபாத்