சிறப்பாக படிக்கும் வழிமுறைகள்
தமிழில் தற்போது 199 மதிப்பெண் வரை சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. வகுப்பில் தமிழ் பாடம் நடத்தும்போது, மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்யக் கூடாது. தமிழ் தானே என அலட்சியமாக இருக்கக்கூடாது.
விடைத்தாளில் அடிக்கோடு இட, பச்சை மை, சிவப்பு மை, ஊதா மை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இந்த மைகள், பேப்பர்களை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் பயன்படுத்தக் கூடியவை. திணைக்கு நேரிடையாக வினா எழுத வேண்டும்.http://www.kalvikalanjiam.com
அதிக மதிப்பெண் பெற, படித்ததை அடிக்கடி திருப்பி பார்க்க வேண்டும். துணைப்பாடத்தில் முதல் ஐந்து பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் அல்லது ஐந்தாம் பாடத்தில் இருந்து 10ம் பாடம் வரை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதி முடித்ததும் அவற்றை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். வினா எண் சரியாக எழுதி இருக்கிறோமா என சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
அதிகாலை சீக்கிரம் எழுந்து படிப்பது மிகவும் நல்லது; அப்போது, அவை மனதில் எளிதில் பதியும்.