"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 டிசம்பர் 2011

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

0 comments


புத்திசாலிதனத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மூளையின் அமைப்பில் சின்ன, சின்ன வித்தியாசங்கள் உண்டு. பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம்.

அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம். பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.

மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது. இதுதான் நமது பலவிதஉணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது, உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது, ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள்.

இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது, வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள். உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி. மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு.

மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை " இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன.

இதனால் பெண்கள், மூளையின் இரண்டு பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று கூடுதல்.

அன்புடன் - MOHAMED THALHA
MEASI.mat.hr.sec.school +1
adirai.in

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி