
BSNL Training Program
இன்ஜினியரிங் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை பி.எஸ். என்.எல்., நிறுவனம் நடத்தவுள்ளது.
பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விடுமுறை காலங்களில், இன்ஜினியரிங் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை நடத்த பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.
மறைமலை நகரில் உள்ள மண்டல தொலைத்தொடர்பு பயிற்சி மையம் மற்றும் தாம்பரத்தில் உள்ள தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தில் இப்பயிற்சிக்கான வகுப்புகள் நடத்தப்படும்.
இது குறித்த முழு விவரங்களை, இணையதளங்களிலும், 94444-00472, 94444-00473 ஆகிய மொபைல்போன் எண்களிலும் அறிந்து கொள்ளலாம்.