அபுதாபியில் அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுக்குழு கூட்டம் எதிர் வரும் 15-12-2011 வியாழன் மாலை ஏழு மணிக்கு அபுதாபி நஜ்தா ரோட்டில் அமைந்துள்ள ஏர்லைன்ஸ் ரெஸ்டாரண்டில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இப்பொதுக்குழுவில் அனைவரும் பங்கேற்று தங்கள் பகுதியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும்,எதிர்காலப் பணிகளுக்கு ஆலோசனைகள் கூறவும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு அபுதாபி மண்டலச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் 050 2821852, ஊடகத்துறை செயலாளர், முதுவை ஹிதாயத் 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.