
அட்டவணைப் படி
அடுப்படிக்கு;
அடிப்படை உரிமையில்
முதன்மையாக இன்று நான்;
சமையலில்
அரைக்குறை அறிவுடன்;
VOIP கொடுக்கும் நிமிடத்துடன்;
நீ இருக்கும் பலத்துடன்
அடுப்படியில்!
சமையலில்;
புரியாத உன்
கைப்பக்குவத்தில்
புருவம் இரண்டும்
புரியாமல் தவிக்கும்;
தெரியாதச் சூத்திரத்தைப்
பக்குவமாக அலைப்பேசியில்
நீ பாடம் எடுக்க;
சிரித்துக்கொண்டேச்
சளைக்காமல்;
சலித்து எடுக்கும் உன் குறிப்பு!
செவியோடு;
உன்னோடு ஓட்டியிருக்கும்
என்னைக் கண்டு;
நண்பர்கள் கிச்சுக் கிச்சுக் காட்ட;
கண் சிமிட்டியப்படி
காய்கறிகள் குதிக்கும்
குழம்பில்;
என்னைப் போல!
அஸ்ஸலாமு அலைக்கும்...
டெஸ்ட் ???