துபாயில் ஈடிஏ மெல்கோ அலுவலர்களுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2012 கிரிக்கெட் போட்டி துவக்க நிகழ்ச்சி 07.01.2012 சனிக்கிழமை மாலை ஜாபில் பூங்காவில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியினை ஈடிஏ மெல்கோ எக்ஸிகியூடிவ் டைரக்டர் அஹமது மீரான் மற்றும் இயக்குநர் – ஆபரேஷன்ஸ் பஷீர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கிரிக்கெட் போட்டியினை துவக்கி வைத்த எக்ஸிகியூடிவ் டைரக்டர் அஹமது மீரான் தனது உரையில் விளையாட்டுப்
போட்டிகள் ஊழியர்களின் உடல்நலம மற்றும் மனநலத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்து வருகின்றது.
இதன் மூலம் ஊழியர்களின் பணிபுரியும் திறனும் அதிகரித்து நிறுவன வளர்ச்சிக்கு உதவிகரமாய் இருக்கும் என குறிப்பிட்டார்.
ஐந்து அணிகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டி 28.01.2012 சனிக்கிழமை மாலை நடைபெறும்.
நிகழ்வில் நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.