தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் 35வது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
விவசாயம், தோட்டக்கலை, சுற்றுப்புறச் சுகாதாரம், மனித நேயம், சராசரி மனிதன் தெரிந்துவைத்திருக்கவேண்டிய சட்டங்கள், இலக்கியம், அரசியல், தத்துவம், பொருளாதாரம், தொழில்நுட்பம், ஆன்மீகம், சமையல், மருத்துவம், கல்வி என பலதரபட்ட பிரிவுகளில் புத்தகங்கள் உள்ளன.
ஓவ்வொரு வருடமும் வாசகர்களின் எண்ணைக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.