"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 ஜனவரி 2012

குவைத்தில் வரும் பிப்ரவரி (2012) மாதம் மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) மாநாடு!

0 comments
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்
7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் ஒரே சிறந்த பேரியக்கமான K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், முதல் முறையாக வருகின்ற பிப்ரவரி (2012) மாதம் முதல் வாரம் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்...

தொடர்ந்து....
  • 3 நாட்கள்!

  • 4 இடங்கள்!

  • 2 சிறப்பு விருந்தினர்கள்!

  • சிறப்புப் சொற்பொழிவுகள்!

  • குவைத்தில் முதல் முறையாக இஸ்லாமிய பட்டிமன்றம்!

  • ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!

  • முஸ்லிம் அல்லாதோருக்கான சிறப்பு நிகழ்ச்சி!

  • குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துரைகள்!

  • குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின் சிறப்புக் கருத்தரங்கம்!

  • பிற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துரைகள்!

  • பரிசளிப்பு நிகழ்ச்சி!
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்

Web & Media Wing,

Kuwait Tamil Islamic Committee (K-Tic)

Kuwait.

Hotline : (+965) 97 87 24 82

Emails : q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com

Official Website : www.k-tic.com

Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

GoogleGroup : http://groups.google.com/group/q8tic

----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி