அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக இன்று ( 14-01-2012 ) அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசர இக்கூட்டத்தில்,
நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துவாவுடன் நிறைவு பெற்றது.
இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
அதிராம்பட்டிணம்.