புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி. பல்கலையில் நடந்த 99வது இந்திய அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருதுக்கு 2011-12 தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி பல்கலையில் ஜனவரி 3ம் தேதி இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது.
அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் ஒரு பிரிவான குழந்தை அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அப்துல் கலாம், அறிவியல் துறையில் புதிய விஷயங்களை கண்டுபிடித்த மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
வேளாண்மை மற்றும் வன அறிவியல் துறையில் விக்யா கேசரி (ஐஐடி, குவஹாத்தி), கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் துறையில் நிதின் பதக் (மோதிலால் விக்யான் மகாவித்யாலயா, போபால்), ஆதிமனிதன் மற்றும் பழக்கவழக்க அறிவியல் துறையில் ஷபனம் (ஜிஎன்டியு, அமிர்தசரஸ்), வேதியியல் அறிவியல் துறையில் மகேஷ் சுந்தரராஜன் (பிஏஆர்சி, மும்பை), புவியியல் இயக்க அறிவியல் துறையில் பெளலோமி கோஷ் (ஜாதவ்புர் பல்கலை), பொறியியல் அறிவியல் துறையில் எஸ். பால் (தேஜ்புர் பல்கலை), சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுரபி தீபாலி முதுலி (மினரல்ஸ் அன்ட் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி மையம், புவேனஸ்வர்), தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அறிவியல் தொழில்நுட்பம் துறையில் தேபராதி சக்ரபோர்தி (ஐஎஸ்ஐ கொல்கட்டா), மெட்டீரியல் சயின்ஸ் துறையில் அஷ¤தோஷ் குமார் துபே (ஐஐடி கான்புர்), கணித அறிவியல் துறையில் திலிப் குமார் (கணித அறிவியல் மையம், கேரளா), சச்சந்தன் காயல், ஐஐடி காராக்புர், மருத்துவ அறிவியல் துறையில் ராஜேந்தர் சிங் (மத்திய மருந்து ஆராய்ச்சி மையம், லக்னோ), புதிய உயிரியியல் துறையில் சஞ்ஜித் முகர்ஜி (ஐஐசிபி, கொல்கட்டா), உடற்பயிற்சி அறிவியல் துறையில் ராஜேஷ் வி. நாயர் (பாபா அடாமிக் ரிசர்ஸ் மையம், மும்பை), தாவர அறிவியல் துறையில் ராஷ்மி சிங் (கேஎன் அரசு முதுகலை கல்லூரி, உ.பி.) மற்றும் ஜெரிமை த்கார் (பிளான்ட் பயோடெக்னாலஜி ஆய்வுமையம், ஷில்லாங்) ஆகியோர் இளம் விஞ்ஞானி விருது பெற்றனர்.