"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 ஜனவரி 2012

அதிரையில் நெடுந்தூர ஓட்டப்போட்டி ! (முழு போட்டோ )

0 comments
நமதூரில் இன்று காலை உலக அமைதிக்கான இரண்டாம் ஆண்டு நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற்றது.

விழா காதிர் முகைதீன் கல்லுரி அருகிலிருந்து சகோ. முகமது இப்ராகிம் அவர்களின் சிறிய உரையுடன் துவங்கி நமதூரில் உள்ள முக்கிய தெருவீதிகளின் வழியே சென்று அதிரை பேருந்து நிலையத்தில் அமைக்கப்ட்டிருந்த விழா மேடையை நோக்கி அடைந்தது.

இந்நிகழ்ச்சியில் பேருராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், சகோ.அப்துல் அஜிஸ், பைத்துல்மால் நிர்வாகி சகோ. மாலிக், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் நண்பர்கள், ஏராளமான பெறியோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இப்போட்டியில் பெரும்பாலும் சிறுவர்கள், வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நமதூரைச்சேர்ந்த நண்பர்களால் போட்டிக்கான பரிசுத்தொகையும், பாக்கெட்டுகளில் நிரப்பப்பட்ட தண்ணிர் ,போட்டிக்கான சீருடைகள் மற்றும் ஏராளமான சிறப்பு பரிசுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில் டிரம்செட் வாத்தியங்களும், வெடிகளும் வெடித்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு அதிரை பைத்துல்மால், த.மு.மு.க, மற்றும் அரசு 108 சார்பாக ‘ஆம்புலன்ஸ் “ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக அதன் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.













Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி