அரபு நாட்டு ஆட்சியாளர்களெல்லாம் ஆடம்பரம்,பகட்டுகளில் மயங்கி மக்களின் பிரச்சினைகளை அறியாதவர்கள் என்ற விஷம பரப்புரையை ஊடகங்கள் பரப்பி வருகின்றன. துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு குடியரசின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருமான ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் அவர்கள் இவர்களில் சற்று வித்தியாசமானவர்.
குதிரைப் பந்தயம்,கார் பந்தயம்,கோல்ஃப் விளையாட்டுக்களில் இளைஞர்களைப் போன்று ஆர்வமாக ஈடுபடும் ஷேக் முஹம்மது அவர்கள் தலசீமியா (Thalassemia) என்ற இரத்த அழிவு சோகை நோய்க்கு உதவும் வகையில் துபாயிலுள்ள லத்தீபா மருத்துவ மனைக்கு நேரில்வந்து இரத்தம் கொடுத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு குடியரசு மட்டுமின்றி பெரும்பாலான அரபு நாடுகளில் இந்த சத்துக்குறைவு நோயால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான இரத்தம் கிடைக்காத காரணத்தால் அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய ஆபரேசன்கள் தள்ளிவைக்கப்படுகின்றன.
இதன் தீவிர தேவையை உணர்ந்த ஷேக் முஹம்மது அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானே முன்வந்து பொது மருத்துவமனையில் இரத்த தானம் செய்தது சர்வதேச ஆட்சியாளர்களுக்கும் முன்மாதிரி என்றால் மிகையில்லை
அரபு நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் குறிப்பாக இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் (ததஜ,இதஜ,தமுமுக) குழுகுழுவாக இரத்த தானம்செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி AAMF சார்பில் துபாயிலும் ஓர் இரத்ததான முகாம் நடத்தி அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நிர்வாகிகள் முயற்சி செய்யலாமே!
மனிதர்களில் மாணிக்கம் என்று சொல்வது இவரை போன்றவர்களை தானோ .
Without people like him to say that the gem.