இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த 161 வெளிநாட்டு முஸ்லிம்களை, விசா விதிமுறைகளை மீறியதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை குடியகல்வு கட்டுப்பாடகம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
இவர்களுக்கு வழங்கப் பட்ட விசா, சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவதற்காக வழங்கப் படும் விசிட் விசா, ஆனால் இவர்கள் விதிமுறைகளை மீறி சுற்றுலா அல்லாத செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா கூறுகையில், "இவர்கள் வெவ்வேறு குழுக்களாக, பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் சில அரபுநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை நடத்தியதாகவும், அவர்களின் தொடர்பு விபரங்கள் எம்மிடமுள்ளன. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஏற்கெனவே அவர்களுக்கு அறிவித்துள்ளோம் " என அவர் தெரிவித்தார்.
ஆனால் மேல் மாகாண ஆளுநர் அலவி மவுலானா கருத்து தெரிவிக்கையில்,"இக்குழுவினர் இலங்கையில் இருப்பது தமக்குத் தெரியும், இவர்கள் அரசியல் நோக்கம் அற்ற தீங்கற்றவர்கள்" என கூறினார்.
இதற்க்கிடையே,தப்லீக் ஜமாஅத் அதிகாரிகள் கூறுகயில்,"இக் குழுவினர் தமது சொந்தப் பணத்தையே அவர்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாகவும், விசா ரத்துச்செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியவில்லை எனவும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, சிரேஷ்ட அமைச்சரான ஏ.எச்.எம். பௌஸி விரைவில் சந்திப்பார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.