வங்கி கொள்ளையர்கள் 3 பேரின் கம்ப்யூட்டர் வரைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் கொள்ளை பற்றி துப்பு துலக்குவதற்காக 98842-03821 என்ற செல்போன் எண்ணையும் வெளியிட்டுளனர். தென்சென்னை இணை கமிஷனர் சண்முகரா ஜேஸ்வரன், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் போலீசார் வரைபடங்களை வைத்துக்கொண்டு வீடு, வீடாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் பற்றி செல்போனில் பேசி பொதுமக்கள் பலர் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
படத்தில் இருப்பவர்களை எங்கள் பகுதியில் பார்த்த மாதிரி இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதுபோன்று 30-க்கும் மேற்பட்டவர்கள் தகவல்களை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளன. கொள்ளை நடத்த பரோடா வங்கியில் கண்காணிப்பு கேமிரா, அலாரம் எதுவும் பொறுத்தப்படாமல் இருந்தது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதையடுத்து வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வங்கியின் முன்புறம் மற்றும் கேஷியர், மானேஜர் ஆகியோரின் அறைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சென்னை முழுவதும் இதுபோன்று பாதுகாப்பு வசதி இல்லாத வங்கிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. வங்கிக்கு யார்? யார்? வந்து செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் வங்கியின் நுழைவுவாயிலில் சுழலும் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
இது தவிர மானேஜர் மற்றும் கேஷியர் அறைகளில் கட்டாயம் அலாரம் பொருத்த வேண்டும் என்றும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் வங்கி பாதுகாவலர் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வங்கி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்
சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். மையங்களுக்கு தினமும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. சில நேரங்களில் இப்படி கொண்டு செல்லப்படும் பணமும் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் கொண்டு செல்லப்படும் வழியை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொணடுள்ளனர். வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் போலீஸ் நிலையங்களின் போன் நம்பர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர்கள், அப்பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் செல்போன் எண்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் கட்டாயம் ஒட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ABDULHAMEED BIN SULTHAN IBRAHIM DUBAI
+971 55 46 23 13 4
+971 55 46 23 13 4