"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 ஜனவரி 2012

சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா ??

0 comments

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !

ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !

3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !

முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !

காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !

புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் !

இதுதான் இன்றைய மனிதனின் நிலை ! மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ? இது ஒன்றும் புகைப்படம் அல்ல ஒரு ஓவியரால் வரையப்பட்டது

ஆக்கம் : அஷ்ரப் ( k s a )

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி