"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 ஜனவரி 2012

எதிர் வீட்டு ஃபாத்திமா ஆமினாவும்

0 comments
ASSALAMU WA ALAIKUM

அஸர் தொழுதுவிட்டு, ஒரு தம்ளரில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் ஃபாத்திமா. எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

ஃபாத்திமா : - ஏன்டி ஆமினா, அஸர் தொழுதுட்டியா?

ஆமினா :- ஆமாக்கா, இப்பத்தான் தொழுதுட்டு வெளியே வாறேன்.

ஃபாத்திமா : - இன்னைக்கு நம்ம ஊர் அசரத்து சொன்ன பயான கேட்டியா?

ஆமினா :- நம்ம ஊரு பிள்ளைங்க சிலபேர் அந்நிய ஆண்களோட தொடர்பு வச்சி காதல் வலையில சிக்கி, அவங்களோட வார்த்தையில மயங்கி அவங்களோடவே ஓடிப்போறாங்களாம்.

ஃபாத்திமா : - இது மாதிரி நம்ம பிள்ளையும் கெட்டுப் போறதுக்குக் நம்ம காரணம் இருக்௬டாது,
பிள்ளையோட தோழிகள் யாருண்டு பாக்குனும், அப்பதான் தகாத பழக்க வழக்ம் வராது.

ஆமினா :- இதே மாதிரி ஒத்தவளே ௬ட்டிக்கிட்டு போய்தான் கல்யாணம் முடிச்சிட்டு வேரயாரோடைஎல்லாம் (சொல்லேவே வாய் குசுதுடி) படுக்க சொளுரனுவலாம்.

ஃபாத்திமா : - இத ஒழிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகளைப் சொல்றாங்க ஆனா, அதையெல்லாம் கேக்குனுமே !! பெற்றோருடைய கவுன்சிலிங் மூலமாத்தான் இத நம்ம பெண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும்னு சொல்றாங்க.

ஆமினா :- எப்படிக்கா கவுன்சிலிங் செய்யுறது?

ஃபாத்திமா : - அதுக்கு நாமதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். இரவு சாப்புடும்போது, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளோட ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுற பழக்கத்த ஏற்படுத்திக்கணும். அந்த நேரத்துல ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை நடந்த விசயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கணும். இப்படிப் பேசினா, ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை இருக்கு என்பதை மற்றவர் புரிந்துகொள்வதோட தாய்-தந்தை அதற்குத் தீர்வையும் சொல்லலாம்.
அந்த நேரத்துல, ஒரு தந்தை அன்பா பேசுற பேச்சும், அவர் ஊட்டுற இஸ்லாமிய விசயங்களும் நம்ம பெண்பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிடும். அதன் பிறகு பொறுக்கிப் பசங்க என்னதான் காதல் வார்த்தயப் பேசுனாலும் அவங்கள வழிகெடுக்கவே முடியாது. இத ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றணும்னு நம்ம அசரத்து பயான முடிச்சாங்க.

ஆமினா :- ஏக்கா, நீங்க ஜும்ஆ தொழுகை, வீட்லதானே தொழுதீங்க?

ஃபாத்திமா : - பிறகெப்படி அசரத்து பயான கேட்டீங்க?

ஆமினா :- அதுவா, என்னோட வீட்டுக்காரர் பள்ளிக்குப் போயி, அசரத்து பயான் பேச ஆரம்பிச்சதும் என்னோட மொபைலுக்கு ௬ப்பிடுவாறு . நான் அத எடுத்து, ஆன் செய்துட்டு சப்தமா (லவ்டு ஸ்பீக்கர்) வச்சிடுவேன். அவ்வளவுதான். எங்க வீட்ல உள்ள எல்லோரும் அசரத்து பயான லைவா கேட்டுக்குவோம்லே !!!
ஃபாத்திமா : - இந்த விசயம் எனக்குத் தெரியாமப் போச்சே. அடுத்த வாரமே நானும் என் வீட்டுக்காரரிடம் சொல்லி, பயான் கேக்க ஆரம்பிச்சுடுறேன். போயிட்டு வர்றேன் அடுத்தவாரம் பாப்போம் >>>>>

CARGO AMEEN
00971 - 050 755 00 23
00971 - 055 943 00 24

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி