"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 ஜனவரி 2012

துபையில் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசணை அமர்வு அழைப்பு

0 comments

சிதறுண்டு போனாலும் இன்னும் சிந்தனையிலும் செயலிலும் ஏகத்துவவாதிகளாய் நீடிக்கும்

 அதிரையை சேர்ந்த அனைத்து தவ்ஹீத் சகோதரர்களையும் ஒன்றிணைக்க,

 ஏகத்துவ பிரச்சாரத்தை இன்னும் வலிமையுடன் ஓருங்கிணைத்து கொண்டு செல்ல,


 இளந்தலைமுறையுடன் இணைந்து செயலாற்றிட,

 பிரிவுகளின் காரணிகளை களைந்திட,

 மனம் விட்டுப் பேசிட ஏதுவாய்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.01.2012) மஃரிப் தொழுகைக்குப் பின் துபை மாநகரில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் மற்றும் மர்கஸ் குறித்த மிக முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெறவுள்ளது.

அதுபோது பொதுவான மற்றும் பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்கின்ற அதிரையை சேர்ந்த அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் விரும்பி அழைக்கின்றோம்.

இந்நிகழ்வில் தாங்கள் அறிந்த அமீரகம் வாழ் அதிரையின் தவ்ஹீத் சொந்தங்களையும் அனுதாபிகளையும் ஆதரவாளர்களையும் அழைத்து வருமாறு வேண்டுகிறோம்.

இடம்:

தவ்ஹீத் இல்லம்

தேரா துபை, நைஃப் ரோடு, அல் புத்தைம் மஸ்ஜித் நேர் எதிரில், DULF ஹோட்டல் பின்புறம், லூத்தாஹ் பில்டிங் அறை எண் : 109

தொடர்புக்கு :

ஜமாலுதீன் 055 2177618 & 04 2981931

அப்துல் காதர் 055 2829759

அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் மற்றும் மர்கஸ் குறித்து நமது வலைதளத்தில் பதியப்பட்டுள்ள ஆக்கங்களை வாசிக்க கீழே சுட்டுக!


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி