"மனசாட்சியே இல்லையா?" இந்தக் கேள்வியை எதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் நாம் நிச்சயம் கேட்டிருப்போம். மளிகைக் கடையிலிருந்து வாங்கி பெட்டிக்கடையில் இருமடங்கு விலை வைத்து விற்கும்போதோ அல்லது போக்குவரத்து போலீஸ்காரர் ரசீது போடாமல் தண்டம் வசூலிக்கும்போதோ இந்தக் கேள்வியை சத்தமாக அல்லது மனதுக்குள்ளாகவோ கேட்டிருப்போம்.
மனதை தமிழில் உள்ளம் என்றும் சொல்வோம் என்பதால் உள்ளசாட்சியே இல்லையா என்பது அவ்வளவு சரியாகப் படவில்லை. தமிழில்தான் இந்தப்பிரச்சினை என்று ஆங்கிலத்தில் பொருள் தேடியபோது Conscience - Motivation deriving logically from ethical or moral principles that govern a person's thoughts and actions என்று விளக்கம் கிடைக்கிறது. அதாவது வாழ்வியல் மற்றும் தர்க்கவியல் அடிப்படையில் ஒருவரது எண்ணம் மற்றும் செயல்களிலிருந்து பெறப்பட்டும் மனக்கிளர்ச்சி அல்லது உள்ளக்கிடையை தமிழில் மனசாட்சி என்றும் ஆங்கிலத்தில் Conscience என்றும் சொல்வர்.
யோவ்! முதலில் மனம் என்பதற்கு விளக்கம் சொல்லய்யா! மனம் ஓர் உறுப்பா உணர்வா என்றே இன்னும் நாம் முடிவுக்கு வராத நிலையில் மனக்கிளர்ச்சி,உள்ளக்கிடை என்று நீர் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருப்பது நியாயம் இல்லை என்று நினைக்கிறீர்களா?! அப்படியெனில்! உங்களுக்கு(ம்) மனசாட்சி இருக்கிறது என்று நினைக்கிறேன்!
என்னது நினைக்கிறேனா? ஆமாம். என் நெஞ்சில் கைவச்சு சொல்றேன்,"நினைக்கிறேன்" மீண்டும் என் மனசாட்சி விழித்துக்கொண்டு "யோவ்! முதலில் மனம் என்பதற்கு விளக்கம் சொல்லய்யா!".நெஞ்சில் கைவச்சு சொன்னால் மட்டும் போதுமா? ஒருவிசயத்தை சொல்லவந்தா ஒழுங்கா சொல்லு.குரங்கு மாதிரி தாவிக்கொண்டே போகாதே!
யாரப்பா அது? குரங்கை இழுப்பது! அட நம்ம மனசாட்சி! பெரியவங்க சும்மாவா சொன்னாங்க 'மனம் ஓர் குரங்கு' என்று! புத்தியக் காட்டிட்டியே ராசா! -இதுவும் என் மனசாட்சிதான்.
ஏம்பா நான் பாட்டுக்கு தூங்கிக்கிட்டு இருந்தேன். நீதானே மனசாட்சி கிலோ என்னவிலைன்னு உசுப்பேற்றினாய்! உனக்கு மனசாட்சி இருந்தால் மனம் என்றால் என்னவென்று சொல்லிவிடு - மீண்டும் மனக்குரங்கு கெஞ்சியது!
மனம் என்பது இதயமா மூளையா என்ற குழப்பம் சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாது விஞ்ஞானிகளுக்கே இருப்பதாக முன்பு வாசித்திருக்கிறேன். மூளை என்பது சிந்திக்க மட்டுமே செய்யும். உடல் உறுப்புக்கள் செயல்பட கட்டளையிடும் தலைமைச் செயலகமே மூளை என்பது சிலரது வாதம். அதேபோல், இதயம் என்பது உடலுக்குத் தேவையான ரத்தஓட்டத்தை ஆக்ஸிஜனுடன் கலந்து செலுத்தும் உறுப்பு மட்டுமே என்று வாதிடுபவர்களும் உளர்.
தமிழில் மனதை நெஞ்சம் என்று சொல்கிறோம். இதனால்தானோ என்னவோ நெஞ்சு என்ற உடற்பகுதியையே நெஞ்சம் என்று குழப்பிக் கொண்டு மனம் என்பது நெஞ்சுப் பகுதியிலுள்ள இதயத்தைக் குறிக்கிறதோ என்னவோ?
சங்ககால இலக்கியங்களில்கூட "நெஞ்சுவிடுதூது" அதாவது தன் மனத்தை உருவகப்படுத்தித் தலைவிக்குத் தூது அனுப்புதலைக் கூறும் இலக்கிய வகை! ஆக, ஆதிகாலம்தொட்டே மனதுக்கும் நெஞ்சுக்கும் தொடர்பு உள்ளது!
அன்பு, காதல்,பரிவு,இரக்கம் என்றெல்லாம் சொல்லப்படும் மனித உணர்வுகளின் பிறப்பிடம் எது? மூளையா இதயமா? அல்லது வேறு எதுவுமா?

ஆக்கம் : ஜமாலுதீன்