"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 ஜனவரி 2012

கைகொடுத்தான் நண்பன் { ETA } அஸ்கான் !!!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்...

கட்டிப்பிடித்தச் சொந்தங்களை

இறுதியாகத் தொட்டுவிட்டு;

ஆமை வேகத்தில்

விமான நிலையத்தில்

ஆசைத் தீர என் தேசத்தில்

நடந்துவிட்டு;

அந்நியத் தேசமான

அமீரகத்தில் அமைதியாக!

காக்கா உறவும்

நானாவும் காதோடு

ரீங்காரமிட;

ஒட்டுமொத்தத்

தமிழகத்தை ஓரளவிற்கு

ஒளித்திருக்கும்;

ஒய்யார நிறுவனத்தில்;

புத்தம் புதுச் சொந்தங்களுடன்

இங்கே!

படித்தவரும் படிக்காதவரும்;

பணி என்ற ஒற்றை நூலில்

கட்டப்பட்டு;

புரியாத நட்பிற்கு கட்டுப்பட்டு!

கற்கை முடித்து இங்கேக்

கற்றுக்கொண்டவர் பலர்;

கற்கையில் கூடக்

கரும்பலகைக் காணாமல்

உயர்ந்தவர்களும் பலர்!

ஊரில் இருந்து திரும்பும்

சக ஊழியரிடம்;

உரிமையுடன்

திண்பண்டம் கேட்டு;

கொடுத்தால்

நொறுக்கித் தீனியை மென்று;

கொடுக்காவிடில்

கோபத்தால் கொன்று;

உறவுகள் சிலிர்க்கும்;

புன்னகைத் தெறிக்கும்!

ஆக்கம் : - யாசர் அரஃபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி