ஆடு வயிற்றில் மனித தலையுடன் குட்டி இருந்ததால் தாராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபாளையத்தைச் சேர்ந்தவர் காதர் அலி.
அலங்கியம் சாலையில் ஆடு கறிக்கடை நடத்தி வரும் காதர் அலி, நேற்று தன்னிடம் இருந்த சினை ஆடு ஒன்று இறக்கும் நிலையில் இருந்ததைக் கண்டு அதனைக் கறிக்காக அறுத்துள்ளார். அப்போது அதன் வயிற்றில் மனித குழந்தையை போல ஆட்டுக் குட்டி இருந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காதர்அலி செய்தியாளர்களிடம் கூறும்போது...
"சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆடு வாங்கினேன் வாங்கும்போதே ஆடு சினையாக இருந்தது குட்டி போட்ட பிறகு அறுத்து விடலாம் என்று வீட்டிலேயே கட்டி வைத்து வளர்த்து வந்தேன் கடந்த 2 நாட்களாக ஆடு குட்டி போட முடியாமல் வேதனையோடு தவித்தது நேற்று மதியம் அந்த ஆடு இறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இறந்த ஆடுகளை நாங்கள் அறுத்து விற்பனை செய்யமாட்டோம். எனவே, ஆடு இறக்கும் முன்னர் அறுத்துவிடலாம் என எண்ணி அதனைக் கறிக்காக ஆட்டை அறுத்த போது, அதன் வயிற்றில் மனித குழந்தையைப் போல உருவம் கொண்ட ஆட்டுக் குட்டி இறந்த நிலையில் இருந்தது அதைப்பார்த்த எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது" இவ்வாறு காதர்அலி கூறினார்.