பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் புறப்பட்டு வந்தது. அதில் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த அசோக் ரத்தன் (56), பூஜா தல்வார் (30) ஆகியோரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகாவினர் அவர்களது சூட்கேஸ்களை சோதனை செய்தனர்.
அதில் பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று உடல் முழுவதும் தடவி பார்த்து பரிசோதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் தொடை முதல் பாதம் வரை நைலான் சாக்ஸ் அணிந்து அதற்குள் பிளாஸ்டிக் டேப் மூலம் 3ஜி மெமரி கார்டுகளை ஒட்டி கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுபோன்று கடத்தி வரப்பட்ட 65 ஆயிரம் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி, இது தொடர்பாக அசோக்ரத்தன், பூஜா தல்வார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், அசோக்ரத்தன் டெல்லியில் துணிக்கடை நடத்தி வருவது தெரிய வந்தது. அதன் மூலம் போதிய வருமானம் இல்லாததால் கடத்தல் தொழிலில் இறங்கியதாக அவர் கூறினார். பூஜா தல்வார் இவரது துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
-- அதில் பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று உடல் முழுவதும் தடவி பார்த்து பரிசோதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் தொடை முதல் பாதம் வரை நைலான் சாக்ஸ் அணிந்து அதற்குள் பிளாஸ்டிக் டேப் மூலம் 3ஜி மெமரி கார்டுகளை ஒட்டி கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுபோன்று கடத்தி வரப்பட்ட 65 ஆயிரம் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி, இது தொடர்பாக அசோக்ரத்தன், பூஜா தல்வார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், அசோக்ரத்தன் டெல்லியில் துணிக்கடை நடத்தி வருவது தெரிய வந்தது. அதன் மூலம் போதிய வருமானம் இல்லாததால் கடத்தல் தொழிலில் இறங்கியதாக அவர் கூறினார். பூஜா தல்வார் இவரது துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
என்றும் அன்புடன்
அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம்