என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.
நானும் எனது நண்பன் “ஜேம்ஸ்” ம் காரிலிருந்து இறங்கியவுடன்
"நீ ஹாவ்" ( நீங்கள் நலமா ? ) என்றேன் எனது குடியிருப்பின் பாதுகாவலரிடம் அவனோ “ ஹாவ் ” ( நலம் ) என்றான்.
இங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொருத்தவகையில் சதுர மீட்டரில் கணக்கீடு செய்து விலைகளை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள், விலைகளைப் பொருத்தவரையில் மலிவாகவே உள்ளது. மேலும் முறையாக அரசின் அனுமதிப்பெற்று அதில் பூங்கா, வாகன நிறுத்துமிடம், மின் கசிவு தடுப்பு சாதனம், பாதுகாப்பு சாதனம், குழாய் எரிவாயு இணைப்பு போன்றவைகள் அமையப்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் பயன்தரும் அனைத்து இல்லப் பொருள்களும் அடங்கியிருக்கும். “ குறிப்பாக நம்மூர் ரியல் எஸ்டேட் எஜமானிகள் கவனிக்கப்படவேண்டியவை, வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்கள் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது என்பது ஓரளவுக் குறையும்.”
இக்குடியிருப்பு பாதுகாப்பு பணிகளுக்காக தனியார் நிறுவன ஊழியர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து, இவர்களின் அன்றாடப் பணியாக குடியிருப்புதாரர்களைப் பாதுகாப்பது, மின்சாரம், தண்ணிர் விநியோகம், குப்பைக் கழிவுகள் அகற்றுதல், வாகனங்கள் கண்காணிப்பு, விபத்துகள் தடுப்பு, தோட்டங்கள் அமைத்தல், ஒழுக்க கட்டுப்பாடுகளை நிலை நிறுத்த வாரம் ஒருமுறை என அணிவகுப்புகள் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் ஊதியமாக ( Management Fees for Security ) ஒவ்வொரு மாதமும் குடியிருப்புதாரர்களால் செலுத்தப்பட வேண்டும்.
சீன நாணயத்தைப் பொருத்தவரை ஒரு யுவான் (ரெமிங்பி) என்பது இந்திய ரூபாயின் மதிப்பில்7.85 ஆக உள்ளது இன்றைய நிலவரம்.
“ Tianhe ” என்றழைக்கப்படும் இப்பகுதியில் மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தை சார்ந்த குறிப்பிட்ட இந்தியர்களே வசிக்கிறார்கள். வெளிநாட்டைச் சார்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் தங்களின் தொழில் நிமித்தமாக வந்து தங்கிச்செல்லக் கூடிய பாதுகாப்பான மற்றும் அனைத்து வசதிகளும் அமையப்பெற்றுள்ள ஒரு சிறந்த பகுதியாகவே கருதப்படுகிறது.
குறிப்பாக,
1. அதிவேக ரயிலில் ( Train ) ஹாங்காங் செல்ல இலகுவாக “Guangzhou East Railway Station “
2. விமான நிலையத்திற்கு செல்ல இலகுவாக அருகிலே “ AIRPORT EXPRESS BUS ” வசதி.
3. இந்நகரின் மற்றப் பகுதிகளுக்கு செல்ல இலகுவாக ஆறு வழி தடங்களைக் கொண்டுள்ள “ Metro Train “ வசதி.
4. உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய விளையாட்டு அரங்கம்.
5. வெளிநாட்டுத் தொழில் அதிபர்கள் தங்குவதற்கு இலகுவாக நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற “ சர்வதேச ஓட்டல்கள் ” ( International Hotel ) மற்றும் சாதாரண “ ஓட்டல்கள் “ என உள்ளது.
6. வெளிநாட்டுத் தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டின் நாணயங்களை பரிமாற்றங்கள் செய்துகொள்ள இலகுவாக “ Bank of China, ICBC, Standard Chartered Bank, HSBC, ABN Amro, City Bank “ போன்ற வங்கிகள் இருப்பது சிறப்பாகும்.
7. சைனீஸ், அரேபிய, இந்திய “ஹலாலான” உணவு வகைகளும், மேலை நாடுகளில் வசிக்கக்கூடிய மக்கள்கள் விரும்பி சாப்பிடக்கூடிய “ விரைவு உணவுகள் “ ( Fast Foods ),“KFC, Pizza Hut, Mcdonald ” போன்ற நிறுவனங்களிலிருந்து கிடைக்கிறது.
என் வீட்டிற்க்கு நாங்கள் வந்தததும் என் சீன நண்பன் என்னிடம் “ ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie (நன்றி வருகிறேன் ) என்று சொல்லி விடைப்பெறத் தயாரானான்.
அப்பொழுது என்னுடைய “உம்மம்மா” கொடுத்தனுப்பிய..............!
இறைவன் நாடினால் ! “ பயண அனுபவங்கள் ” தொடரும்....!
சேக்கனா M. நிஜாம்