"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
03 பிப்ரவரி 2012

செல்பேசி கட்டணங்கள் 30% அதிகரிக்கும்!

0 comments

செல்பேசிக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் செல்பேசிப் பயனாளர்கள் பில்லில் இந்த ஆண்டு 20 முதல் 30% வரை கூடுதல் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடுமையான போட்டி நிலவும் இந்தத் துறையில் ஒவ்வொரு சேவை நிறுவனமும் மற்றொரு நிறுவனத்தைக் கவிழ்க்க புதிய கவர்ச்சிகரத் திட்டங்களைக் கொண்டு வந்து கட்டணங்களை கடுமையாக குறைத்து வந்தன.

ஆனால் இனிமேல் செல்பேசி மலிவாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2008ஆம் ஆண்டு கட்டணங்களைக் கடுமையாகக் குறைத்தனர். இதனால் அவர்கள் லாபத்தில் மந்த நிலை ஏற்பட்டதாம்!

வோடஃபோன் தனது போஸ்ட் பெய்ட் கட்டணங்களை 20% ஜனவரி மாதம் சத்தம் போடாமல் உயர்த்தியது. இது டெல்லியில் நிகழ்ந்தது, இதனை மற்ற நகரங்களுக்கும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரியை அனைத்து செல்பேசி சேவை நிறுவனங்களும் கடைபிடிக்கவுள்ளது. சரி போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன, பிரீ பெய்ட் கட்டணங்கள்?

மார்ச் முதல் பிரீ-பெய்ட் கட்டணங்களும் உயர்த்தப்படுகின்றன. 96% பிரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இது கடினமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 20- 30% வரை கட்டணங்களை உயர்த்தினால்தான் இந்த நிறுவனங்கள்,அதாவது இந்த ஜாம்பவான் நிறுவனங்கள் மூச்சு விட முடியுமாம்!

பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். கூட தனியார் துறையைப் பின்பற்றி கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன.

அதாவது இந்த நிறுவனங்களின் கடன் ரூ.2,75,000 கோடி! அதனை அடைக்க கட்டண உயர்வைத் தவிர வேறு வழியில்லை என்று ரிலையன்ஸ் நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னணியில் உள்ள 3 நிறுவனங்களைத் தவிர மற்ற சேல்பேசி சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலாண்டு காலத்தில் ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை இழக்கின்றன என்று யூனிநார் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆகவே செல்பேசியை காதில் வைத்தபடியே பேசிக்கொண்டே நடப்பது நடந்து கொண்டே பேசுவது, ஒரு மணி நேர பயண நேரம் முழுதும் பேசிக்கொண்டேயிருப்பது போன்றவை குறையும் என்று எதிர்பார்க்கலாமா?


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி