"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 பிப்ரவரி 2012

மரண அறிவிப்பு - EPMS பள்ளி நிறுவனர் அபுல் ஹசன்

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடுத்தெருவைச் சார்ந்த EPMS பள்ளியின் நிறுவனரும், அம்மார்-இன் தகப்பனாரும், முஹம்மது சாலிகு, ஜஹபர் சாதிக் இவர்களது சகோதரியின் கணவரும் (மக்கம்)தமீம் அன்சாரியின் மாமனாரும் ஆகிய அபுல் ஹசன் அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) 03-02-2012 இரவு 9:00 மணியளவில் அவர்களது நடுத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது நல்லடக்கம் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மர்ஹூம் அபுல் ஹசன் அவர்கள் அதிரையின் மூத்த தவ்ஹீது பிரச்சாரகர்களில் ஒருவர் என்பதும், EPMS ஆங்கில வழி பாலர் பள்ளியின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

29:57 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
29:57. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
-அல்குர்ஆன்-

தகவல்: A.அப்துல் மாலிக் - துபாய்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி