"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
07 பிப்ரவரி 2012

AAMF -இன் அறிவிப்பும் வேண்டுகோளும்!!!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த 14-01-2012 அன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் எடுத்த முடிவின்படி,

நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக (மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் (AAMF) சார்பாக வெளிமாநிலத்திலிருந்து மூன்று முஸ்லிம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமித்த செய்தி அனைவரும் அறிந்ததே.

இவர்களின் சம்பளத்தை காலம் தாழ்தாமல் செலுத்துவதற்கு ஏதுவாக லண்டன் வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு உட்பட்ட சகோதரர் லண்டனில் இருக்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் ரூ.2,000/- தருவதாக போறுப்பேற்றுக் கொண்டுள்ளார். (Jazakallah Khair).

இதுபோல்,வெளிநாடுவாழ் அதிரை சகோதர்களும் தாமாகவே முன்வந்து இயன்ற நன்கொடையை தந்து உதவி இந்த நல்ல காரியத்தில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு:
சகோ.A .தமீம்
தலைவர், அமீரக கிளை.
Mobile: 00971 -50 -7480023 ,
Email : adiraiallmuhallah@gmail.com

இப்படிக்கு,
AAMF நிர்வாகம்
அமீரக கிளை.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி