"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 பிப்ரவரி 2012

அதிரை.இன் "வலைப்பூங்கா" (BLOG-PARK) அறிமுகம்

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரையின் முதல் இணையமான அதிராம்பட்டினம்.காம் அதிரவாசிகளை இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அறிவீர்கள். இணைய பயனர்களின் வசதிக்காக அதிராம்பட்டினம்.காம் என்பதை அதிரை.காம் என்று சுருக்கியும், ஆங்கிலம் அறியாதவர்களும் சரளமாக இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருக்களால் வாசிக்கும் வகையில் இயங்கி வந்த அதிரை.காம் தற்கால தேவைகளைக் கருத்தில்கொண்டு புதிய வசதிகளுடன் அதிரை.இன் என்ற பெயரில் கடந்த ஒருவருடமாக முழுக்க முழுக்க வணிகநோக்கின்றி தன்னார்வலர்களால் இயக்கப்பட்டு வருகிறது.

எனினும், ப்ளாக்கர் எனப்படும் இலவச வலைப்பூக்களில் நமதூர்வாசிகள் தனித்தனியாக எழுதி வருவதால் சில நல்ல ஆக்கங்கள் பலரது கவனத்தில் வராமல் வாசிப்பின்றி வீணாகப் போகின்றன. இத்தகைய குறைபாடுகளைக் களையும் வகையில் அதிரையின் அனைத்து வலைத்தளங்களையும் திரட்டி வலைப்பூங்கா பகுதியில் பட்டியலாக இடுவதன்மூலம் அனைத்து தனிநபர் வலைத்தளங்களையும் அவற்றின் புதிய ஆக்கங்களுக்கு ஏற்ப உடனடியாக ஓரிடத்திலிருந்தபடியே வாசிக்கும் வசதியை பிப்ரவரி 2, 2012 முதல் அதிரை.இன் அறிமுக செய்கிறது.
மேற்சொன்னபடி, பயனுள்ள ஆக்கங்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதோடு, அவற்றைத் தேடுவதில் வாசகர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலுமே "வலைப்பூங்கா" பதிவுகளைத் திரட்டும். தற்போது பயனிலுள்ள அதிரை வலைத்தளங்களில் 26 தளங்களை அதிரை.இன் வலைபத்திரட்டி அதிவேகமாகத் தொகுத்து எந்தவித பாரபட்சமின்றி வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் இணைப்புப்பாலமாகச் செயல்படும் என்பதை அதிரை வாசிகளுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பயனுள்ள, பலதரப்பட்ட பதிவுகளையும் பதிவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இப்பகுதியில் அவ்வப்போதைய தேவைகளுக்கேற்ப மேம்பட்ட வசதிகள் செய்யப்படும். வலைப்பூங்காவில் பட்டியலிடப்பட்டுள்ள ஆக்கங்களுக்கு அந்தந்த வலைப்பூ உரிமையாளர்களே பொறுப்பாவர் என்பதையும் வாசகர்கள் அறியவும்.

குறிப்பு: இங்கு பட்டியலிடப்படாத வலைத்தளங்களின் முகவரியை info@adirai.in முகவரிக்கு மடலிட்டால், அடுத்த பதிப்பிலோ அல்லது தேவையானபோது இணைத்துக்கொள்வோம். அதிரை வலைப்பூங்காவில் உங்கள் பதிவை இணைக்க கீழ்கண்ட நிரலை உங்கள் வலைப்பூ சாளாரத்தில் இணைத்துக் கொண்டால், அதிரை.இன் திரட்டியில் தானாகவே பட்டியலிடப்படும். பட்டியலிருந்து நீக்க விரும்புவர்களும் அவ்வாறே தனிமடலிட்டால் 24 மணிநேர இடைவெளிக்குள் நீக்கப்படும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி