அஸ்ஸலாமு அலைக்கும்...
துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
என்னை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;
கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!
மரணமோ என்னை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!
கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!
அழுகை நேரம் போக;
உள்ளம் உன்னைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!
ஆக்கம் : - யாசர் அரஃபாத்