ஏகஇறைவனின் திருப்பெயரால்....
குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லையாம் ?
சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை !!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மறக்க முடியாத இரத்தகரைப் படிந்த 2002ல் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தில் கொலைகாரன் மோடியின் சதி திட்டத்தால் காவி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதில் மத்திய அமைச்சர் இஹ்ஸான் ஜாப்ரியும் அடங்குவார் அதில் உயிர் தப்பிய அவருடைய மனைவி சுப்ரீம் கோர்ட்டில் தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் அதில் 62 பேருடன் மோடியையும் விசாரிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2009 ஆண்டு மோடியை விசாரிப்பதற்காக சிறப்பு புலணாய்வுக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்திருந்தது. அந்த சிறப்பு புலணாய்வுக் குழு கடந்த 8-2-2012 அன்று மோடிக்கும் 2002 கலவரத்திற்கும் தொடர்பில்லை என்றும் மோடியை இந்த வழக்கில் சேர்க்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன் மோடியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும் படியும் நீதிமன்றத்தை பரிந்துரைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
பிரதமர் நாற்காலியின் மீது கண்.
எப்படியாவது வருகின்ற 2014 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்காக மோடியை நிருத்தியே ஆக வேண்டும் என்று பி.ஜே.பி.யை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரத்தினர் பிஜேபி தலைவர்களை விடாது நச்சரித்துக் கொண்டு வருவதை நாம் அறிந்து வருகிறோம்.
கொலை வழக்கில் மோடி சிக்கி இருப்பதால் தான் பி.ஜே.பி. காரர்களே மோடியை சமீபத்திய வட மாநில தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட அனுமதிக்க வில்லை அதனால் தான் பிரதம வேட்பாளராகவும் நிருத்த முடிய வில்லை என்பதால் மோடியை மேல்படி கொலை வழக்கிலிருந்து விடுவித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து சிறப்பு புலணாய்வுக் குழுவினரை சரிக் கட்டி மோடிக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றுக் குறிப்பிட்டு அறிக்கையை சமர்ப்பிக்க அன்டர்கிரவுன்ட் வேலை நடந்துள்ளது.
இந்த அறிக்கை வெளியான அடுத்த நிமிடமே இனி பிரதமர் பதவிக்காக மோடி நிற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் வட மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்றும் கட்காரி அறிவித்திருப்பது மேல்படி அறிக்கை பிரதமர் பதவிக்காக அவசரம் அவசரமாக பார்க்கப்பட்ட அன்டர்கிரவுன்டு வேலை தான் என்பதை சான்றுப் பகருகிறது.
நீதிபதிகளே பணத்திற்கு விலை போகும் இந்த காலத்தில் நீதிபதிகளால் நியமிக்கப்பட்ட சிறப்புக் புலணாய்வுக் குழுவினர் விலை போவது பெரிய மேட்டரா என்ன ? அதுவும் மோடியின் மகுடிக்கு முன் மண்டியிடாத அதிகாரிகளின் கடந்த கால நிலையை அறிந்தவர்கள் மண்டியிடத் தயங்குவார்களா ?
நேர்மையாக நடந்திருந்தால் ?
மதவாதமும், பழிவாங்கலும்...
சிறப்பு புலணாய்வுக் குழு மட்டும் நேர்மையான முறையில் இந்த விசாரனையை நடத்தி இருந்தால் கலவரத்திற்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று சொல்லவே முடியாது காரணம் 2002; கலவரத்திற்கு முதல் நாள் மோடி கூட்டிய போலீசார் சந்திப்பின் போது குஜராத்தின் உளவுத்துறை தலைவர் சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ் அவர்கள் மோடியால் வரவழைக்கப் பட்டிருந்தார்.
சங்பரிவார குண்டர்களை நான் தயார் பண்ணி விட்டேன் அதனால் நாளைய தினம் அவர்களால் முஸ்லீம் பகுதிகளில் கலவரம் நடக்கும் கலவரப் பகுதிகளிலிருந்து வரும் போன் கால்களை அட்டன் பண்ண வேண்டாம் அட்டன் பண்ணினாலும் மேல்படி இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மோடிக் கூறியதை சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். தெஹல்காவை நாடகக் குழுவினர் என்று நீதிமன்றம் ஓரம் கட்டினாலும் பட்டின் வாக்கு மூலத்தை ஓரம் கட்ட முடியவில்லை.
பட் அந்த சந்திப்பில் இல்லை அவர் வரவழைக்கப்பட வில்லை என்று மோடி மறுத்ததும் இதை விசாரிப்பதற்கென்று மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.
அதிரடியாக களத்தில் இறங்கிய ராஜூ ராமச்சந்திரன் அவர்கள் மோடி மறுப்பதில் ஆதாரம் இல்லை என்றும் மோடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட யாரையும் இதிலிருந்து நீதிமன்றம் கன்டிப்பாக விடுவிக்கக் கூடாது அனைவரையும் குறுக்கு விசாரனை செய்தே ஆக வேண்டும என்றும் பட் அப்போதைய உளவுப் பிரிவுத் தலைவர் என்பதால் அவர் இல்லாமல்; போலீஸ் உயர் அதிகாரிகளை மோடியால் கூட்டவே முடியாது அவ்வாறு கூட்டினாலும் பட்டுக்குத் தெரியாமல் மாநில காவல் துறையால் அறவே இயங்க முடியாது என்பதால் மோடி மறுப்பதை நம்பத் தேவை இல்லை என்று திட்டவட்டமாக தனது அறிக்கையை எஸ்.ஐ.டி யிடம் ஒப்படைத்து விட்டார்.
2002 கலவரத்தில் எண்ணற்ற முஸ்லீம் உயிர்கள் பலியான அதே நேரம் 600 இஸ்லாமிய கட்டிடங்கள் (பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், மர்கஸ்கள்) உடைக்கப்பட்டதாகவும், தீக்கிறையாக்கப்பட்டதாகவும் கூறி அவற்றை புணர் நிர்மானம் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யும்படி குஜராத் இஸ்லாமிய சேவைக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த போது அதை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம் மோடியின் மெத்தனப் போக்கினால் தான் எண்ணற்ற உயிர்ப் பலிகளும், ஏராளமான பொருட் சேதமும் ஏற்பட்டன என்று அறிவித்திருந்தது.
கலவரத்தை தடுத்து நிருத்த சக்தி பெற்றிருந்தும் தடுத்து நிருத்தாததுடன் கலவரத்திற்கு மோடியின் பங்கு கனிசமான அளவு இருந்தது என்பதை அமெரிக்க உளவுத்துறை மூலம் அறிந்தே அமெரிக்கா மோடிக்கு விசா தர மறுத்தது.
மோடி ஒரு மகா மோசமான மதவாதி என்பதுடன் தன்னை எதிர்ப்பவரை பழி வாங்குவதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார் என்பதற்கு கீழ்காணும் சம்பவம் சான்றுப் பகர்ந்து நிற்கிறது.
2002 கலவரத்திற்கு முதல் நாள் கூட்டப்பட்ட போலீஸ் சந்திப்பில் பேசப்பட்ட கலவரத்திற்கான திட்டமிடலை சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விட்டார் என்றக் காரணத்தால் அவரைப் பழி வாங்குவதற்காக திட்டம் தீட்டினார் மோடி.
மோடியின் நிர்வாகத்தின் கீழ் பட் அவர்கள் உளவுத்துறை தலைவராக பணியாற்றிய போது சட்ட விரோத செயல்கள் எதாவது செய்துள்ளாரா என்று பூதக் கண்ணாடி இட்டுத் துலாவிப் பார்த்தார் மோடி ஆனால் எதுவும் கிடைக்க வில்லை. அதற்கு முந்தைய நிர்வாகத்தில் எதாவது தென்படுகிறதா என்று தேடினார் அதிலும் எதுவும் கிடைக்க வில்லை இவ்வாறே சடைவடையாமல் அதற்கு முன்பு அதற்கு முன்பு என்றுத் தேடி ஓடி இறுதியாக 21 ஆண்டுகளுக்கு முன் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள ஜம்ஜோத்பூர் காவல் நிலையத்தில் ஒரு காவல் கைதி இறக்கும் பொழுது அங்கே பட் துணை கமிஷனர் பொறுப்பில் இருந்தார் என்பது தெரிய வந்தது.
அதை வைத்து அவரை ஒரே அமுக்காக அமுக்கினார் அவர் வகித்த பதவியைப் பறித்து கைது செய்து உள்ளேத் தள்ளி சித்ரவதை செய்தவர் தான் இன்றைய தலைசிறந்த(???) நிர்வாகி என்று சங்பரிவாரத்தினரால் போற்றப்படும் மோடி என்று அண்;ணா ஹஸாரே குழுவில் இடம் பெற்றவரும் முன்னால் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூசன் ஏற்கனவே சொன்னதையும் இந்த நேரத்தில் இங்கே நினைவு கூறுகிறோம்.
பட் மட்டும் என்னை அப்பொழுது அணுகி இருந்தால் அவருக்கு சட்ட ரீதியாக என்னாலான உதவியை செய்து மோடியை இன்னும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியில் வசமாக சிக்க விட்டிருப்பேன் என்றும் சேர்த்தேக் கூறினார்.
மதவாதமும், பழிவாங்கும் போக்குடையவரால் மக்களை வழிநடத்தி செல்ல முடியுமா ? அதுவும் பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழும் இந்தியாவில் இதற்கு சாத்தியமாகுமா ?
- மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று குஜராத் உயர்நீதிமன்றம் சாடி உள்ளது,
- மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று சஞ்சீவ்பட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்,
- மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் விசாரித்து எஸ்.ஐ.டி. இடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்,
- மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் கூறி உள்ளார்,
- மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று தெஹல்கா ஆடியோ,வீடியோ மூலம் நிரூபித்துள்ளது.
இத்தனை ஆதாரங்கள் தௌளத் தெளிவாக இருந்த போதிலும் எப்படித்தான் எஸ்.ஐ.டி புலாணய்வுக் குழுவினரால் மோடிக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை என்று கூற முடிந்ததோ தெரியவில்லை ?
பணம் பத்தும் செய்யும் என்பது இது தானோ ?
இந்திய தேசத்தின் மீது பற்றுள்ளவர்கள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்