"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 பிப்ரவரி 2012

திருச்சி விமான நிலையம் : வழியனுப்பிய உறவினர்களின் நெகிழ்ச்சி !

0 comments



அதிரையிலிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும்.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தங்களின் விமான சேவையை இயக்கி வருகின்றன.

அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமானநிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும்.
குறைந்தபட்சம் 9,000 அடி நீளத்துக்கு ஓடுதளத்தை உயர்த்தினால் மட்டுமே சர்வதேசவிமான நிலைய அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


விமான நிலையத்தை வடிவமைத்த நிபுணர் மத ஈடுபாடு உள்ளவராக இருப்பாரோ ! என்னவோ ? மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ளோம் என்பதை மறந்துவிட்டு " கோபுரம் அதன் மீது கவசங்கள் " இருப்பது போல் உருவாக்கி கொடுத்துள்ளார்.

மனதை வருடிய காட்சிகள் :
வழியனுப்ப வந்துள்ள தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது. மனதை வருடிய காட்சிகள் குறிப்பாக.....................
1. குழந்தைகள் தங்களின் வாப்பாவைக் ( Father ) “டாட்டா” க் ( Bye Bye ) காண்பித்து வழியனுப்பியது..............................விரைவில் வந்துவிடுவேன்ட “செல்லம்” , “தங்கம்” என கன்னத்தில் தட்டி கண்ணீரை அடக்கிக்கொண்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...........................

2. அன்பான மனைவியோ தங்கள் கணவன் இரண்டு மூன்று ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது.........................

3. பெற்றோர்களோ தங்களின் எதிர்பார்ப்பில் “ நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான் ” என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது......................

4. அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற என்னற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு “கையசைத்து” விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது......................

இவைகள் எல்லாம் என் மனதை வருடியது.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :
1. விமான நிலையங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பார்சல்களை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் பெண்களாக இருந்தாலும் சரி......................
2. பதற்றத்துடன் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

3. பயணம் மேற்கொள்ளும் முன் தங்களின் உடமைகளை சரிபார்த்துக்கொள்ளவும் குறிப்பாக தங்களின் பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவைகளை.

4. கூடுதல் எடைகளுடன் கூடிய பொருட்களை தவிர்க்கவும். விமான நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்டவை மாத்திரம் கொண்டுசெல்லவும்.

குறிப்பு : இன்று திருச்சி விமான நிலையத்திற்கு நண்பர் மற்றும் எனது உறவினர் ஆகியோர்களை “துபாய்” நாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காகச் சென்றேன். அங்கே கண்ட என் மனதை வருடியக் காட்சிகளை இங்கே பதிந்துள்ளேன்.

இறைவன் நாடினால் ! தொடரும்...........................

ஆக்கம் : - சேக்கனா M. நிஜாம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி