"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 பிப்ரவரி 2012

எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வாபரக்கதுஹு...

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே....

எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!

தங்களுடைய இஸ்லாமிய விரோத கொள்கைகள் தூள் தூளாவதை, அதுவும் அவர்களின் கருத்துக்களாலேயே , அவர்களின் போய்க்கதைகாளாலையே நொறுங்கி மறைவதை கண்டு ஜீரணிக்க முடியாமல் சில சுன்னத் பெயர் தாங்கிய சகோதரர்கள் வெகுண்டெழுந்து உணர்ச்சிவசப்பட்டு தனிமனித தாக்குதல்களையும், தந்தையர்களை இழிவாக பேசுவதையும், தங்கள் இழிக்கொள்கைகளை தட்டி கேட்பவர்களை வாஹ்ஹாபி மதத்தை(?!) சார்ந்தவர்கள், புதிய கொள்கைக்காரார்கள், யஹூதிகள், சைத்தான்கள்...என்றெல்லாம் வாய் நோக புறம் கூறி அதன் மூலம் தாங்கள் கொண்டுள்ள அநியாய கொள்கைகளை நிலைநாட்டி விட முடியும் என்று பரிதாபமாக நம்புவதை பார்த்து வருகிறோம்...

இப்போது எது தனி மதம், எது புதிய கொள்கை, எது இஸ்லாம் என்பதை ஒரு சிறிய ஒப்பீடுடன் அறிந்து கொள்வோம்!

எல்லா தரப்பினரும் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி நபியும், இறுதி தூதரும் ஆவார்கள் என்றே நம்புகிறோம்.

இந்த கருத்துப்பரிமாற்றங்களுக்கிடையில் ஒரு (சுன்னத்) சகோதரர், "வணக்கத்துரியவன்" அல்லாஹ் ஒருவன் என்று சொல்வது திரித்து கூறுவதாகும் என்ற வினோத கருத்தை முன்வைத்தார்! அதன் அர்த்தம் "வணக்கத்துக்குரியவன்" அல்லாஹ் ஒருவன் மட்டுமில்லை என்று எடுத்து கொள்ளலாமா? சம்மந்தப்பட்டவர்கள் விளக்கலாம். அதுதான் புது மதம்!

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தின் இஸ்லாம் என்பது யாரிடமுன், எதனிடமும், எந்த கபரிடமும் பொய் ப்ராத்திக்காத இஸ்லாம். ஜியாரத் என்பது மறுமையை நினைவுறுத்தி இறந்தவர்களுக்காக பிரார்த்திக்க வலியுறுத்தப்பட்ட ஒரு சிறந்த சுன்னத்! அந்த சிறந்த எடுத்துகாட்டுதல்களுடனான அழகிய முறையை மட்டும் பின்பற்றவேண்டும் என்று சொல்வது புது மதமா? அல்லது, அல்லாஹ்வின் தூதர் காட்டித்தராத "கபுர் வணக்கத்தை" அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்வோம் என்று அடம் பிடிக்கும் இஸ்லாமிய விரோத முஸ்லிம்கள் தனி மதமா??? எது புது மதம்????

இறைநேசர்கள் என்ற தகுதியை பெறுபவர்கள் யார் என்ற படிப்பினையை குரான் நெடுகிலும் அல்லாஹ் சொல்லித்தந்தும், இறைநேசர்களை நாம் அறியமுடியாது, அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் மறைவான விஷயம், அப்படியே, நமக்கு தெரியமுடியும் என்று வைத்துகொண்டாலும், அதனால் நாம் அவர்களிடம் சென்று ப்ரார்த்திக்கலாகாது என்று சொல்வது புது மதமா? அல்லது, அல்லாஹ் சொல்வதெல்லாம் எங்களுக்கு கவலையில்லை, பெருமானார் எங்களுக்கு சொல்லாமல் விட்டுவிட்ட(?!) (அஸ்தஹ்பிர் அல்லாஹ்...) இந்த கபுர் வணக்கத்தை, உலகை உணரமுடியாமல் துகில் கொள்ளும், இறந்துபோன இறைநேசர்கள் என்று எங்களுக்கு நாங்களே முடிவு பண்ணிக்கொண்டவர்களிடம் போய் பிரார்த்தித்து அவர்களின் மூலம் இறைவனின் நெருங்கிய உறவை பெற்றுக்கொள்வோம், என்று விடாப்பிடியாக செய்துவருபவர்கள் புது மதத்தினரா?? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்!

அல்லாஹ்வும், ரசூலும் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். எல்லா நபிமார்களும் மனைவி குழந்தைகளை பெற்றிருந்தார்கள் என்று அல்லாஹ் சொல்வதையும், குரான் வசனத்தையாவது மகர் கொடுத்து திருமணம் செய்ய வலியுறுத்தியும் அல்லாஹ்வின் இறுதி தூதர் நம் தலைவர், உலகுக்கு அருட்கொடையாம் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய சுன்னத்களையும் பேணவேண்டும் என்று வலியுறுத்தும் வாஹாப்பிகள் என்று சில விஷமிகளால் குற்றம் சாட்டப்படும் முஸ்லிம்கள் புது மதத்தினரா? அல்லது, சுன்னத் எல்லாம் பேசாதீர்கள், அது ஒன்றும் பர்ளு இல்லையே ! அதை கட்டாயம் கடைபிடிக்காமல் இருந்தால் என்ன நடந்துவிடும்? கிறிஸ்தவர்கள் சொல்வதுபோல், ஈசா (அலை) அவர்கள் என்ன திருமணமா செய்தார், நாமும் திருமணம் செய்ய? திருமணம் என்ற சுன்னத்தை தானே விடுகிறோம், அது ஒன்றும் தப்பு இல்லையே!! என்று தங்களின் மனோ இச்சைப்படி சொல்வது புது மதமா??? சிந்திக்கவும்!

அர்த்தம் அறியாமல் ஓதப்படும் குரானின் ஒவ்வொரு எழுத்துக்கு கூட நன்மை கிடைக்கும். குரானும் சுன்னாஹ்வும் தான் நமக்கு அழகிய வழிகாட்டி. இரண்டுமே அல்லாஹ்வின் வஹீ அடிப்படையிலானவைகள், அதனால் அதை மட்டும் தான் நாம் இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வது புது மதமா? அல்லது, குரானும் ஹதீசும் போதாது, அதில் இல்லாத, நன்மையான விஷயங்கள் பலவும் உள்ளது என்று நம்புவது புது மதமா? இஸ்லாத்தை முழுமை படுத்திவிட்டதாக அல்லாஹ்வும் அவன் இறுதி தூதரும் சொல்லியபின்னும் அதை ஏற்காமல் புதியவற்றை இஸ்லாத்தில் புகுத்தியவர்கள் புது மதத்த்னரா??? கிறிஸ்தவர்கள் மரிய்முடைய மகனாகிய ஈஸாவை (அலை) அளவுக்கதிகமாக புகழ்ந்தது போல் என்னையும் புகழாதீர்கள் என்று கட்டளையிட்ட நம் தூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கூற்றை உண்மையாக்க கிளம்பிய கொள்கை கூட்டமா புது மதம்? அல்லது, இல்லை இல்லை அந்த எச்சரிக்கை எல்லாம் நமக்கு உதவாது, மனிதர்கள் மடமையால், ஷிர்கான கருத்துக்களுடன் பாடி வைத்த கவிதைகளை புனிதமாக கருதி அந்த பாடல்கள் மூலம் நம் நபியை (ஸல்) வரம்பு மீறி புகழ்ந்தே தீருவோம், அது ஷிர்க்கில் போய் முடிந்தாலும் பரவா இல்லை என்று நினைப்பவர்கள் புது மதத்தவர்களா???

இஸ்லாத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத கண்டுபிடிப்புகளான சூபிசம் என்னும் நச்சுக்கொள்கையை எதிர்க்கும் முஸ்லிம்கள் புது மதத்தினரா ? அல்லது வயிறு வளர்க்க கண்டுபிடிக்கப்பட்ட தரீக்கா கொள்கைகளை இஸ்லாம் தான் என்று அதாரம் இல்லாமல் வாதிடும் கொள்ளை கூட்டத்தினர் புது மதத்தினரா? கேட்டால் ஆப்ரிக்காவில் செய்தார்கள், ஐரோப்பாவில் செய்தார்கள், எத்தியோப்பாவில் செய்தார்கள், அவர்களை நிறுத்தசொல்லுங்கள் நாங்கள் நிறுத்துகிறோம்...ஏன் சவுதியில், செய்யவில்லையா? துபாயில் செய்யவில்லையா? என்ற குருட்டு சாக்குபோக்குகள் வேறு!!! எவன் செய்தால் என்ன? எங்கு செய்தால் என்ன? குரான் ஹதீஸ் சொல்லுகிறதா என்று கேள்வி கேட்க்கும் முஸ்லிம்களா புது மதத்தினர்??? அல்லது குரான் ஹதீஸ் முக்கியமில்லை, முல்லாஹ் சொன்னாரா? எங்கள் ஊர் ஆலிம் சொன்னாரா? அது தான் இஸ்லாம்! என்று சொல்வது தான் புது மதமா???

கட்டு கதைகளை நம்பவேண்டாம், இறைநேசர்கள் யார் என்று தீர்மானிப்பவன் அல்லாஹ் மட்டுமே! அவனுக்கு மட்டுமே தெரியும் யார் சுவர்க்கம் செல்வார்கள், யாரெல்லாம் நரகம் செல்வார்கள் என்று. ஒருவர் நரகம் தான் செல்வார் என்று நாம் நினைப்போம், ஆனால் கடைசியில் நன்மை ஒன்றை செய்து அவர் சுவர்க்கம் சென்று விடுவார் . இவர் சுவர்க்கம் தான் செல்வார் என்று நாம் நினைப்போம் ஆனால் அவர் கடைசியில் தீய ஒன்றை செய்து நரகம் புகுவார். இது அல்லாஹ்வின் வஹீ. இதை நம்பாமல், நாமே தீர்மானிக்கலாம் யார் சுவர்க்கம் செல்லும் இறைநேசர் என்று சொல்பவர்கள் தானே புது மதத்தினர்!!!! அப்படி மனோ இச்சைப்படி, அல்லாஹ்வின் மறைவானவற்றை அறியும் ஆற்றலை எங்களுக்கும் உண்டு என்று பறைசாற்றுபவர்கள் தானே புது மதத்தினர்??? அத்தகைய அல்லாஹ்விற்கு மாற்றமான முடிவுகளை எடுத்திட கட்டுக்கதைகளை மனம் போன போக்கில் வாய் வழி வரலாறு (?!) என்ற பெயரில் இட்டுகட்டி அதை அல்லாஹ்வின் குரானிய நபித்துவ சான்றுகளுடன் ஒப்பீடு செய்பவர்கள் தானே புது மதத்தினராக இருக்க முடியும்! அல்லாஹ்வுக்கே பாடம் சொல்கிறார்கள் , சுபுஹானல்லாஹ்!

ஈசா (அலை) என்ன திருமணமா செய்தார்?, மூசா (அலை) தற்க்கொலை செய்யவில்லையா? போன்ற கேள்விகளை தான்தோன்றித்தனமாக எந்த முறையான ஆதாரங்களும் இல்லாமல், வெட்கமில்லாமல் தங்களுடைய அவுலியா பக்திக்கு ஆதாரமாக்குவது தானே புதுமதம்! ? ஈசா (அலை) அவர்கள் திருமணம் செய்யவில்லை என்று கிறிஸ்தவர்களை போல் வாதிடுபவர்கள் அதற்க்கான ஆதாரத்தை குரான் மற்றும் ஹதீசிலிருந்து இன்னும் தெளிவாக்கவில்லை என்பதே உண்மை! ஈசா(அலை) அவர்களின் மனைவி பத்தி குரானில் இல்லாததிலிருந்தே அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று நிரூபணம் ஆகிறது என்ற புதிய "வாசிப்பு" முறையை(?!) வேறு அமுல்படுத்துகிரார்கள் இந்த புதிய மதத்தினர். அத்தகையோர், குரானில் குறிப்பிடப்படாத லட்சக்கணக்கான நபிமார்களை நிராகரிப்பவது போலாகிவிடும் என்பதை வசதியாக மறந்தும் விடுகிறார்கள்!
மேலும் ஒரு சகோதரர், மூஸா நபியவர்களின் மரணம் பற்றிய "கதையை" குரானிருந்தோ, நபி மொழியிலிருந்தோ சொல்லாமல், எங்கிருந்தோ கொண்டு வருகிறார், எதற்க்காக? தங்களின் அவுலியா வை எப்பாடு பட்டாகிலும் அவுலியா தான் என்று நிரூபித்துவிட வேண்டும் என்ற பரந்த(!?) நோக்கத்துக்காக! தங்கள் அவுலியாவின் (?!) கராமத்துக்களை நிரூபிக்க வேண்டி இனி அல்லாஹ்வே அருளினான் என்று சப்பை கட்டி ஏதாவது முன்னறிவிப்பு புத்தகத்தை கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை! அப்படிப்பட்ட புது மதன்களிரிந்து நம்மை அல்லாஹ் காப்பானாக!

மனித படைப்பான கவிதை தொகுப்புகளுக்கு புனிதம் கற்ப்பிக்க கூடாது, குரான் தான் நமக்கு புனித நூல்! ஏனைய மனிதப்படைப்புகளில் தவறு இருக்கும் என்று சொல்வது புது மதமா? அல்லது, இறைநேசர்கள் என்று தாங்கள் அடையாளம் கண்டுகொண்ட (?!) மனிதர்கள் இயற்றிய கவிதைகளில் எந்த தவறும் இருக்கவே முடியாது. இதில் தவறிருந்தால் குரானிலும் தவரிருப்பதாய் ஆகிவிடும். ஏனென்றால் குரானில் அப்படி கூறப்பட்டுள்ளதே, குரானில் இப்படி கூறப்பட்டுள்ளதே, அதுபோல் தானே இந்த கவிதைகளிளுள் கூறப்பட்டுள்ளது, என்றெல்லாம் கூறி, அந்த மனித படைப்புகளை புனிதம் கர்ப்பித்து குரானுக்கு கூட கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை கொடுப்பது புது மதமா??? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்!

இஸ்லாமிய விரோத மோடிக்களும், அத்வாநீக்களும் கூட இஸ்லாத்துக்கு எதிராக எடுத்துகாட்டமுடியாத தூய இஸ்லாத்தை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று போதிப்பவர்களா புது மதத்தினர்? அல்லது ஏனைய மதத்தினர்களும் கேலி செய்து கைகொட்டி சிரிக்கும் இஸ்லாமிய விரோத கொள்கைகளை இஸ்லாத்தின் பெயராலேயே செய்து வருபவர்களா புது மதத்தினர்???

அஹ்மதியா என்னும் புது மதத்தினர், அவர்களின், தலைவர் தான் இஸ்லாமின் தூதர் என்று அவரின் கராமத்துகளை எடுத்து காட்டுகின்றனர்! ஹிந்து மதத்தினர் சில போலி சாமியார்களின் கராமத்துகளை (சித்துவேலைகளை) வைத்து அவர்கள் தாம் தெய்வம் என்றும் அவதார புருஷர்கள் என்றும் கூறுகின்றனர்!
அதுபோலவே, இந்த புது மதத்தினர்களும் (அஸ்தஹ்பிர் அல்லாஹ்) சில நபர்களின் மேல் கராமத்துகளை இட்டுகட்டி அந்த நபர்கள் அல்லாஹ்வின் ஏஜென்றுகள் என்கிற மாயையை வளர்க்கின்றனர், அதுதானே புது மதம்!

யார் சொன்னாலும், எந்த இயக்கத்தினராக இருந்தாலும், எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள், குரான் ஹதீஸ்படி ஆராய்ந்து பாருங்கள். ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், அல்லது நிராகரித்து தூக்கி எறியுங்கள்! அதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. எல்லா புதிய கண்டுபிடிப்புகளையும் மார்க்கத்திலிருந்து தூக்கி எறியுங்கள் என்று அழைப்பதா புது மதமா? அல்லது, குரான் ஹதீஸ் மட்டும் போதாது, நம் தமிழ் கலாசாரம் என்ன சொல்கிறது, சைவ வைணவ சித்தாந்தங்கள் என்ன சொல்கிறது? அதன் அடிப்படையில், நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக பின்பற்றியவைகளையும் நாம் பின்பற்றவேண்டும் அவை இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமானவைகளாக இருந்தாலும் பராவா இல்லை என்று தன்னிச்சையாக பிடிவாதம் பிடிப்பவர்கள் புது மதத்தினரா?

இஸ்லாத்திற்கு தலை குனிவு வந்தாலும் பரவா இல்லை, தமிழ் கவிதைகளை யாரும் தட்டி கேட்டுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஷிர்க்கான கவிதைகளுக்கும், கட்டுகதைகளுக்கும், இஸ்லாமிய விரோத கற்பனைகளை, இஸ்லாமிய போர்வையில் பாமர மக்களைக்குழப்பும் தமிழில் சொல்வது தான் இஸ்லாமா??? அதை ஆதரிக்கும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் அடிக்கும் கூத்துக்கள் தாம் இஸ்லாமா?? குரானில் வெளியில் சொல்லமுடியாத இரகசிய கருத்துக்கள் உள்ளன அதைத்தானே சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் தோலுரிக்கின்றனர் , அதில் தவறில்லை, அவருக்கு தண்டனை கொடுப்பதும் தவறில்லை என்ற வினோதமான ரெட்டைவேடம் போடும் தன்மை தான் இஸ்லாமா???அதை தட்டிகேட்டு, இஸ்லாம் ஒரு மதமில்லை, அது ஒரு வாழ்வு முறை, அது ஒரு தனிக்கலாச்சாரம், அது ஒரு வாழ்க்கை மார்க்கம். அதில் வரைமுறைகள் உள்ளன, அதில் கூட்டவும் குறைக்கவும் யாருக்கும் அதிகாரமில்லை, அது யாருக்கும் சொந்தமானதுமில்லை. எல்லாரும் அதை ஆராய்ந்து சிந்தித்து பின்பற்றவேண்டும் என்று சொல்வது புது மதமா?????

சிந்திப்பார்களா, முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களை புது மதத்தினர் என்று அவதூறு கூறி தங்கள் இழிக்கொள்கைகளை இஸ்லாம் என்று வாதிடும் முன்???!!!

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து கொள்வோம், கடை பிடிப்போம் கலப்படமில்லாத இஸ்லாத்தை!

வஸ்ஸலாம்
ஆக்கம் : - முஹம்மத் சுபுஹன் சுல்தான்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி