காவல்துறைக்கு ஒரு சபாஷ் ஆனால் எங்கோ உதைக்குது, தமிழ்நாட்டில் நடக்கும் பல குற்ற சம்பவங்களை திசை திருப்ப நடந்த திட்டமிட்ட ஆவேச நடவடிக்கையாக தெரிகிறது ( இவர்கள் ஐவரும் குற்றவாளிகளாகவே இருப்பினும்) . .
ஏனெனில் சம்பவம் நடந்த இடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, இங்கே அதிகபட்சம் 600 அடிக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை, இந்த இடத்தில வெளியிலிருந்து போலீஸ் சுட்டு ஒருவரை கூட உயிரோடு பிடிக்கமுடியவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்திகிறது இதுவரை வரை தமிழ்நாட்டில் நடந்த போலி என்கவுன்டர்2010 நவம்பர் 8-ம் தேதி, கோவையில் பள்ளிச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொலை செய்த மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுபோல், 2010 பிப்ரவரி 17-ம் தேதி, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பாண்டி, வேலு ஆகிய ரவுடிகள் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2010 பிப்ரவரி 16-ம் தேதி, கல்மண்டையன், கவியரசு ஆகிய ரவுடிகள் மதுரையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2009, பிப்ரவரி 2-ம் தேதி, பல வழக்குகளில் தொடர்புடைய சண்முகம் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2008, ஏப்ரல் 3-ம் தேதி, தஞ்சாவூர் கரந்தை பகுதியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய மிதுன் சக்ரவர்த்தி என்பவர் போலீஸார் மீது வெடிகுண்டு வீசியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
2007, ஆகஸ்ட் 1-ம் தேதி, வெள்ளை ரவி மற்றும் அவரது கூட்டாளி குணா ஆகியோர் ஒசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2007 பிப்ரவரி 5-ம் தேதி, மணல்மேடு சங்கர் என்பவர் மயிலாடுதுறையில் இருந்து மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரை தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
2006, டிசம்பர் 12-ம் தேதி, பங்க் குமார் சென்னை புறநகர்ப் பகுதியில சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனஅதே சமயம் குஜராத் போலி என்கௌன்ட்டர் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை... முழுமையான செய்தி வெளிவந்தாலே உண்மை தெரியவரும், இதனால் குற்றம் குறையும் என்று போலீஸ் வேண்டுமானால் மக்களை ஏமாற்ற நினைக்கலாம் மக்கள்ஏமாறுவார்கள் எவ்வளவு நாளைக்கு?
துப்பாக்கில் சூட்டில் உயிரிழந்த 5 பேரும் வெளிமாநிலத்தவர்கள் என்று காவல் துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார். ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையரை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஜன்னல் வழியே போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை தாக்கப்போவதாகவும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 1 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில் 5 பேரும் வீழ்த்தப்பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்
எது எப்படியோ உண்மை வெளிவர தாமதம் ஆகலாம் தடுக்க முடியாது