"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 பிப்ரவரி 2012

கையெழுத்து இயக்கம் ...!

0 comments

அஸ்ஸலாமு அழைக்கும் ...

பாரம்பரியமிக்க தொடர் வண்டி வழித்தடமான திருவாரூர் -திருத்துறைப்பூண்டி - முத்துபேட்டை -
அதிராம் பட்டினம் வழியாக காரைக்குடி வரை வந்து சென்று கொண்டிருந்த தொடர்வண்டி பாதையை
அகல பாதையாக மாற்ற வேண்டும் என நமதூரின் பல்வேறு அமைப்புகள், வணிகர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு வகையில் போராட்ட வியுகங்களை வகுத்து நீண்ட நாட்காளாக போராடி வருகின்றனர்.

இதற்க்கு மத்திய அரசும் ரயில்வே இலாக்காவும் செவி சாய்க்காமல் இன்று வரைஒரு சிறு துரும்பை கூட நகர்த்த வில்லை என்பதை நாம் அறிவோம் .

பாரம்பரியம் மிக்க இந்த தடத்தின் தேவையை உணர்ந்து வருகின்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில் தாக்கல் செய்ய இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இந்த தடத்தின் அகல ரயில் பாதைக்கு நிதியை ஒதுக்கி பணிகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கத்தை சென்னை வாழ் அதிரை மக்கள்கள் நடத்த இருக்கின்றனர்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்கு பொது மக்கள்/சென்னை வாழ் அதிரைவர்த்தகர்கள் பெருவாரியாக ஆதரவு வழங்கிட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம்.

இந்த கையெழுத்து பிரதிகளை மாண்புமிகு ரயில்வே மந்திரி மேதகு தினேஷ் திருவேதி , மத்திய நிதியமைச்சர் , உள்ளாட்ச்சி துறை அமைச்சர். உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்து நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். இன்ஷா அல்லாஹ் ....

இது பற்றி மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் : +91 9944426360

குறிப்பு :-

நேரிடையாகவந்து கையெழுத்து வழங்க இயலதவர்களான பெண்கள் ,முதியவர்கள் மேற்காணும் செல் நம்பரை தொடர்புகொண்டு முகவரி தெரிவித்தால் நேரில் வந்து கையெழுத்து
பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே சென்னையில் வசிக்கும் அதிரைவாசிகள் ஒவ்வெருவரும் இந்த படிவத்தில் கையப்பம்மிட்டு இந்த போராட்டத்தில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளலாமே !

thanks " adirai.in

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி